1. Home
  2. ஜோதிடம்

10-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

10-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

10-09-2019-newstm-daily-astrology

10-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

10-Sep-19
விகாரி வருஷம் தக்ஷிணாயணம்
வர்ஷருது ஆவணி - 24
செவ்வாய்கிழமை

துவாதசி மறு நாள் காலை 4.45 மணி வரை. பின் திரயோதசி
உத்ராடம் பகல் 2.22 மணி வரை பின் திருவோணம்
சித்த யோகம்
நாமயோகம்: சோபனம்
கரணம்: பவம்

அகஸ்: 30.18
த்யாஜ்ஜியம்: 31.32
நேத்ரம்: 2
ஜீவன்: 1
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 1.20
சூரிய உதயம்: 6.06


ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
வைஷ்ணவ ஏகாதசி.
வாமன ஜெயந்தி.
திருவோண விரதம்.
கீழ்த்திருப்பதி ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்குத் திருமஞ்சன ஸேவை.
நான்கு மாடவீதிப் புறப்பாடு.

திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்
சூரியன்
பூரம் 3ம் பாதம் - ஆட்சி
சந்திரன்
மகரம் - பகை
செவ்வாய்
பூரம் 2ம் பாதம் - பகை
புதன்
உத்திரம் 3ம் பாதம் - ஆட்சி - உச்சம்
குரு
கேட்டை 3ம் பாதம் - பகை
சுக்ரன்
உத்திரம் 1ம் பாதம் - பகை
சனி
மூலம் 4ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், சுக்ரன் -  ரண, ருண ஸ்தானத்தில்  புதன் - அஷ்டம ஸ்தானத்தில்  குரு - பாக்கிய ஸ்தானத்தில்  சனி , கேது - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன், என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும்.  கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும்.வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலகட்டமிது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - சுக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும்.  எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின்  சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில் அதிக வருவாய் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6மிதுனம்: கிரகநிலை: ராசியில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் - சுக ஸ்தானத்தில் புதன் - ரண ருண ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது -  அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்த கோரிக்கைகள் நிறைவேறும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9கடகம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும் கையிருப்பு கூடும் அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7சிம்மம்: கிரகநிலை: ராசியில்  சூர்யன், செவ்வாய், சுக்ரன் -  குடும்ப ஸ்தானத்தில் புதன்- சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன்  பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கன்னி: கிரகநிலை: ராசியில் புதன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்   ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்,  சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று மனகுழப்பம் தீரும். எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். மாணவகண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5துலாம்: கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது- சுக ஸ்தானத்தில் சந்திரன் -  பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், சுக்ரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று அடுத்தவரை  நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை  தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் - லாப ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு  பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. அனைத்து இடத்திலும் அனைத்து வேளைகளிலும் அனுசரித்துச் செல்ல வேண்டும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.   அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது - குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், சுக்ரன் -  தொழில் ஸ்தானத்தில் புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மகரம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் -  லாப ஸ்தானத்தில்  குரு- அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க  முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், சுக்ரன் -  அஷ்டம ஸ்தானத்தில் புதன்- தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது - அயன,சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9மீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், சுக்ரன்  -  களத்திர ஸ்தானத்தில் புதன் -  பாக்கிய ஸ்தானத்தில்  குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 09:57 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும்.  கணவன் மனைவிக்கிடையே  இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். மேலதிகாரிகளால் உதவிகள் பெறலாம். சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம்.   அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

newstm.in

Trending News

Latest News

You May Like