1. Home
  2. ஜோதிடம்

10-08-2019 தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம்.

10-08-2019 தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம்.

10-08-2019-newstm-daily-astrology

10-08-2019 தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

10-Aug-19 விகாரி வருஷம்
தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது
ஆடி - 25 சனிக்கிழமை

தசமி பகல் 2.20 மணி வரை. பின் ஏகாதசி
கேட்டை மறு நாள் காலை 3.13 மணி வரை பின் மூலம்
சித்த யோகம்
நாமயோகம்: மாஹேந்த்ரம்
கரணம்: கரஜை

அகஸ்: 30.59
த்யாஜ்ஜியம்: 6.13
நேத்ரம்: 2
ஜீவன்: 0
கடக லக்ன இருப்பு (நா.வி): 1.20
சூரிய உதயம்: 6.06


ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கஜேந்திர மோட்சம்.
கெருட வாகனத்தில் திருவீதிவுலா.
குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
இன்று கெருட தரிசனம் நன்று கலிய நாயனார் கோட்புலி நாயனார் குருபுஜை.
திதி: திதித்துவயம்
சந்திராஷ்டமம்: கார்த்திகை
சூரியன் ஆயில்யம் 2ம் பாதம் - பகை
சந்திரன் விருச்சிகம் - நீசம்
செவ்வாய் ஆயில்யம் 4ம் பாதம் - நீசம்
புதன் பூசம் 3ம் பாதம் - நட்பு
குரு கேட்டை 2ம் பாதம் - பகை
சுக்ரன் ஆயில்யம் 2ம் பாதம் - பகை
சனி பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு புனர்பூசம் 1ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 3ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - சுகஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன், குரு  - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 4.58 மணிக்கு சுகஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இன்று பின்னிரவு 3.13 மணிக்கு அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாளாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன்  மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6ரிஷபம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன், குரு  - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 4.58 மணிக்கு தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் சுகஸ்தானத்திற்கு மாறுகிறார். இன்று பின்னிரவு 3.13 மணிக்கு சப்தம ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது. எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.  ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை யோசித்து செய்வது நல்லது. பிள்ளைகள் கல்வி தொடர்பான  விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9   மிதுனம்: கிரகநிலை: ராசியில் ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சந்திரன், குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 4.58 மணிக்கு தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில்  இருக்கும் செவ்வாய் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இன்று பின்னிரவு 3.13 மணிக்கு ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வீண் செலவு கட்டுப்படும். சேமிப்பு அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். எந்த வேலையை செய்தாலும் மன திருப்தி உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9   கடகம்: கிரகநிலை: ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சந்திரன், குரு  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 4.58 மணிக்கு ராசியில்  இருக்கும் செவ்வாய் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு  மாறுகிறார். இன்று பின்னிரவு 3.13 மணிக்கு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும். பல வித குழப்பங்கள் வந்து வந்து போகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 சிம்மம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில்  சந்திரன், குரு  - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் ராஹூ - விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 4.58 மணிக்கு விரையஸ்தானத்தில்  இருக்கும் செவ்வாய் ராசிக்கு மாறுகிறார். இன்று பின்னிரவு 3.13 மணிக்கு சுகஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் உண்டாகும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். வாகனங்களில் செல்லும் போது  கவனம் தேவை. அடுத்தவருடன்  பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5   கன்னி: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில்  சந்திரன், குரு  - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 4.58 மணிக்கு லாப ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் விரையஸ்தானத்திற்கு மாறுகிறார். இன்று பின்னிரவு 3.13 மணிக்கு தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் சுகஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல்  செய்வதில் வேகம் இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6துலாம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன், குரு  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 4.58 மணிக்கு தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இன்று பின்னிரவு 3.13 மணிக்கு தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில்  இருக்கும் சந்திரன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும். பெண்கள் திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும்  கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7  விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  சந்திரன், குரு  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 4.58 மணிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார். இன்று பின்னிரவு 3.13 மணிக்கு ராசியில்  இருக்கும் சந்திரன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு  மாறுகிறார். பலன்: இன்று மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது.  மனதில் உற்சாகம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும். வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம்  நன்மை ஏற்படும்.  பிள்ளைகள் எதிர் காலம் குறித்து சிந்தனை மேலோங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9      தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - களத்திர  ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் -  விரைய ஸ்தானத்தில்  சந்திரன், குரு   என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 4.58 மணிக்கு அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இன்று பின்னிரவு 3.13 மணிக்கு விரையஸ்தானத்தில்  இருக்கும் சந்திரன் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையும். நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3  மகரம்: கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில்  சந்திரன், குரு  - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 4.58 மணிக்கு சப்தம ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். இன்று பின்னிரவு 3.13 மணிக்கு லாப ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் விரையஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கணவன், மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். அடுத்தவருக்கு ஆலோசனை சொல்ல போய் பிரச்சனை வரலாம். பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாய் இருப்பார்கள். பிள்ளைகளுடன்  அனுசரித்து  செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6  கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன், குரு  - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 4.58 மணிக்கு ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். இன்று பின்னிரவு 3.13 மணிக்கு தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி உண்டாகும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா என்ற எண்ணம் உண்டாகும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். எல்லாவித ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம்  அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட  மாட்டீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6  மீனம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன், குரு  - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 4.58 மணிக்கு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  இன்று பின்னிரவு 3.13 மணிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த  பணம் வந்து சேரும். புதிய நபர்களிடம்  கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7  

newstm.in

Trending News

Latest News

You May Like