1. Home
  2. ஜோதிடம்

(10-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

(10-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

(10-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன்  -  பாக்கிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) -  லாப ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று இரவு 12.34 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோர்கள் - உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை

அதிர்ஷ்ட எண்: 5, 9

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் - குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்  -   அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 12.34 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம்  காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

கிரகநிலை:

ராசியில்  ராஹூ, புதன், சூர்யன்  -  களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன் -  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 12.34 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வேலை விஷயமாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக  பேசுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1, 3

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  -  அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 12.34 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய  பொருள்களை வாங்கி மகிழ்வீர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  -  களத்திர ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் -  லாப ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 12.34 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும்  கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2, 6

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 12.34 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 5

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன் -  ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று இரவு 12.34 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று அரசாங்க அனுகூலம் ஏற்படும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 9

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   -  சுக  ஸ்தானத்தில்  சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்  - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு, புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 12.34 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று நல்ல நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடக்கூடிய நேரம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். காரிய தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3

கிரகநிலை:

ராசியில்  கேது, குரு (வ), சனி (வ)  -  தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு, புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 12.34 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். பலரை திருப்தி படுத்த நீங்கள் பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நல்ல அன்யோன்யம் இருக்கும். வெற்றியுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 7

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் -  தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்   -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 12.34 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும்

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்   - லாப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 12.34 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று ஆன்மிக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன்  -  சுக ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்  -  தொழில்  ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 12.34 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Trending News

Latest News

You May Like