1. Home
  2. ஜோதிடம்

09-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும்.

09-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும்.

09-09-2019-newstm-daily-astrology

09-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

9-Sep-19
விகாரி வருஷம் தக்ஷிணாயணம்
வர்ஷருது ஆவணி - 23
திங்கட்கிழமை

ஏகாதசி மறு நாள் காலை 3.27 மணி வரை. பின் துவாதசி
பூராடம் பகல் 12.43 மணி வரை பின் உத்ராடம்
சித்த யோகம்
நாமயோகம்: சௌபாக்யம்
கரணம்: வணிஜை

அகஸ்: 30.19
த்யாஜ்ஜியம்: 37.55
நேத்ரம்: 2
ஜீவன்: 0
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 1.30
சூரிய உதயம்: 6.06


ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ஸ்மார்த்த ஏகாதசி.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை.
சூரியன்
பூரம் 3ம் பாதம் - ஆட்சி
சந்திரன்
தனுசு - நட்பு
செவ்வாய்
பூரம் 2ம் பாதம் - பகை
புதன்
உத்திரம் 2ம் பாதம் - ஆட்சி - உச்சம்
குரு
கேட்டை 2ம் பாதம் - பகை
சுக்ரன்
உத்திரம் 1ம் பாதம் - பகை
சனி
மூலம் 4ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் -  ரண, ருண ஸ்தானத்தில் புதன் -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - சுக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை  உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6மிதுனம்: கிரகநிலை: ராசியில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் - சுக ஸ்தானத்தில் புதன் - ரண ருண ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.  நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6கடகம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும்  கூடுதல் கவனம் நன்மை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7சிம்மம்: கிரகநிலை: ராசியில்  சூர்யன், செவ்வாய், சுக்ரன் -  குடும்ப ஸ்தானத்தில் புதன்- சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது, சந்திரன் - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை  சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும் பதவி உயர்வு கிடைக்கும்.   அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7கன்னி: கிரகநிலை: ராசியில் புதன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்   ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்,  சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி  வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி  கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள்  வந்த சேரும். வருமானம் கூடும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5துலாம்: கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது, சந்திரன் -  பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், சுக்ரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.  குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக  பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே  நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.   அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது, சந்திரன் - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் - லாப ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள்.  உறவினர்களுடன்  சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும்.   அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில்  ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், சுக்ரன் -  தொழில் ஸ்தானத்தில் புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்ப பிரச்சனை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள்  வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9மகரம்: கிரகநிலை: ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்,  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன்-  லாப ஸ்தானத்தில்  குரு- அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி , கேது,  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், சுக்ரன் -  அஷ்டம ஸ்தானத்தில் புதன்- தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 07:06 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like