1. Home
  2. ஜோதிடம்

09-12-2020 - தினப்பலன்: இன்று இந்த ராசிகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்...

09-12-2020 - தினப்பலன்: இன்று இந்த ராசிகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்...

09-12-2020 - தினப்பலன்: இன்று இந்த ராசிகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்...

இன்று சிலருக்கு எதிர்பாராத வகையில் தொல்லைகள் ஏற்படலாம். படிப்பில் கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் செல்லும் போது மிக கவனம் தேவை. ஏனெனில் சிலருக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குல தெயவத்தை வழிபட்டு செல்லுங்கள். வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

இன்று சிறுசிறு பிரச்சினைகளுக்கு கூட கணவன் - மனைவியரிடையே பிரச்சினைகள் தோன்றலாம். கவனம் தேவை. பணம் வர வேண்டிய இடத்திலிருந்து தாராளமாக வரும். குடும்ப ஒற்றுமையை கலைக்க சிலர் முயற்சி செய்வார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

இன்று எல்லா விஷயங்களிலும் தாமதமாக செயல்படுவீர்கள். நல்லோர் ஒருவரை சந்தித்து அவர் ஆசி பெறுவீர்கள். வருமானமும் ஓரளவுக்கு நல்லபடியாகவே அமையும். சிலர் உங்களை மனம் நோகும்படி செய்வார்கள். திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

இன்று குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகளின் கடுமை குறையும். அதனால் மனநிம்மதி இருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணி நிமித்தமாக சிலர் வெளியூர் புறப்பட வேண்டியிருக்கும். முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும். உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

இன்று வியாபாரம் அமோகமாக இருக்கும். முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு தேடுவீர்கள். தங்கள் உதவியாளர்களுடன் மோதல் போக்கு ஏற்பட்டு பின்பு சரியாகும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வரத்து இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும். தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

இன்று அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனமுடன் இருக்கவும். தேவைக்கேற்ப பழகிவிட்டு உங்களை உதாசீனப் படுத்தி விடுவார்கள். வெளிநாடு செல்ல விரும்புவோர் சற்று காலத்திற்கு முயற்சியை தள்ளி போடுவது உத்தமம். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். ஆனால் உங்கள் வேலைகள் மற்றவர்களுக்கு பொறாமையைக் கொடுக்கும். தெய்வ அருள் கிட்டும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

இன்று நிதி நிலையில் மாற்றம் இருக்காது. தாய்வழி உறவினர்களால் சிலர் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்கள் தங்கள் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகள் சிலருக்கு கை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

இன்று வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பீர்கள். வியாபார ரீதியான பயணமொன்று வெற்றியைத் தரும். தங்களுடன் அன்பாய் பேசி வந்தவர்கள் கூட பகைமை பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

இன்று பணிகளில் கவனம் செல்லாது. சிலர் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, மனை விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். நல்ல மனிதர்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதேநேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

இன்று விரக்தி மனப்பான்மை தோன்றும். சக ஊழியர்கள் தோழமையாக நடந்து கொள்வார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மூலம் சிலருக்கு மன மகிழ்ச்சி கிடைக்கும். குரு வழிபாடு செய்யுங்கள். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும்

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

இன்று போட்டிகள் ஏற்பட்டாலும் தங்களின் கடின முயற்சியால் அதைச் சமாளித்து விடுவீர்கள். ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்கள் நல்ல ஆதாயம் காண்பீர்கள். சிலருக்கு தக்க சன்மானம் கிடைக்கப் பெறுவீர்கள். சோம்பல் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Trending News

Latest News

You May Like