1. Home
  2. ஜோதிடம்

08-10-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை.

08-10-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை.

08-10-2018-newstm-daily-free-astrology

08-10-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I புரட்டாசி 22 I இங்கிலீஷ்: 08 October 2018 I திங்கள்கிழமை

சதுர்த்தசி பகல் 11.23 மணி வரை. பின் அமாவாஸ்யை I உத்திரம் பகல் 2.13 மணி வரை. பின் ஹஸ்தம்

ப்ராம்மம் நாமயோகம் I சகுனி கரணம் I சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 40.38 I அகசு: 29.38 I நேத்ரம்: 0 I ஜீவன்: 0 I கன்னி லக்ன இருப்பு: 6.43 I சூர்ய உதயம்: 6.05

ராகு காலம்: காலை 7.30 - 9.00 I எமகண்டம்: காலை 10.30 - 12.00 I குளிகை: மதியம் 1.30 - 3.00 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு:இன்று மேல் நோக்கு நாள் I ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா I இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு I சர்வ மஹாளய அமாவாஸ்யை

திதி: அமாவாஸ்யை I சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

மஹாளயபட்சத்தில் பித்ரு கடன் தீர்ப்போம் - உலகிற்கு வழிகாட்டும் இந்து தர்மம்

மேஷம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் ராகு- ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மற்றவர்களை நன்றாக புரிந்து கொண்டு அன்புடன் பழகுவீர்கள். மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம். வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9ரிஷபம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மிதுனம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சுக்ரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில்  சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை. அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 உங்கள் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!கடகம்: கிரகநிலை: ராசியில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் -  சுக ஸ்தானத்தில்  சுக்ரன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு பாடங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 சிம்மம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - சுகஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் வியாபார விரிவாக்கம் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வருமானம் அதிகம் கிடைக்க பெறுவீர்கள். வராது என்று எண்ணிய பணம் வந்து சேரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7கன்னி: கிரகநிலை: ராசியில் சூர்யன், சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வாழ்க்கை துணையினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சகோதர வழியில் வேண்டிய உதவி கிடைக்கும். பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். மனோ தைரியம் கூடும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 முன்னோர்களை வரவேற்போம் - மகாளய அமாவாசை விரதம்துலாம்: கிரகநிலை: ராசியில் சுக்ரன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் வேகம் இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிலும் வெற்றிகள் குவியும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி -  தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சாதுர்யமாக பேசி மற்றவர்களிடம் வேலை வாங்குவீர்கள். உடல்நிலை சுக சௌக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அடையும். சமூகத்தில் மரியாதை உயரும். பணவரத்து பலவழிகளில் இருக்கும் அதே நேரத்தில் செலவும் வரும். வாக்கு வன்மையால் புகழ் கூடும்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 தனுசு: கிரகநிலை: ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன் வசூலாகும். புதிய நபர்களை நம்பி எதையும் செய்யும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு பயணம் திட்டமிட்டபடி அமையும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 குரு பெயர்ச்சி 2018-19: உங்கள் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்!  மகரம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று அரசாங்கம் தொடர்பான வேலைகள் தடையின்றி நடக்கும். குடும்பத்தில் திடீர் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். உறவினர்களுடன் சுமூகமான போக்கு காணப்படும். அவர்களால் நன்மையும் உண்டாகும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல் தரும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6கும்பம்: கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விடுமுறை கால கல்வி கற்க ஆர்வம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6மீனம்: கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். குருவை வணங்குங்கள். மனதில் தைரியமும் புதிய உற்சாகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் இழுபறியான நிலை காணப்படும். நிர்பந்தத்தின் பேரில் மனதுக்கு பிடிக்காத வேலை செய்ய வேண்டி இருக்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

newstm.in

Trending News

Latest News

You May Like