(08-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்
(08-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது, சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று பகல் 2.17 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று ஒரு நல்ல நாள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகாது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - குடும்ப ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது, சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று பகல் 2.17 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
கிரகநிலை:
ராசியில் ராஹூ, புதன், சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் கேது, சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று பகல் 2.17 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிரச்சினைகள் அகலும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
கிரகநிலை:
ரண, ருண ஸ்தானத்தில் கேது, சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று பகல் 2.17 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடக்கும். புதிதாக ஆடை ஆபரணங்கள் சேர்க்கை நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் கேது, சனி (வ) - ரண, ருண ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று பகல் 2.17 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது, சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று பகல் 2.17 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது, சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று பகல் 2.17 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும். தொழில் ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6
கிரகநிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, சனி (வ) - தைரிய ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு, புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று பகல் 2.17 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
கிரகநிலை:
ராசியில் கேது, சனி (வ) - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு, புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் ராசிக்கு மாறுகிறார்.
இன்று பகல் 2.17 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7
கிரகநிலை:
ராசியில் குரு (வ), சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் கேது, சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று பகல் 2.17 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன் - லாப ஸ்தானத்தில் கேது, சனி (வ) - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று பகல் 2.17 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.
பலன்:
இன்று பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் கேது, சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ), சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
இன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இன்று பகல் 2.17 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9