1. Home
  2. ஜோதிடம்

07-02-2024 - இன்றைய ராசி பலன் - இன்று பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள்.

1

மேஷம்:

இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் அவ்வளவு திருப்திகரமாக இருக்கும் எனக்கூறமுடியாது. வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம்குடும்பத்திலும் வரவுக்குமீறிய செலவுகளால் பொருளாதாரத் தட்டுப்பாடுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளுக்கு உற்றார்-உறவினர்களே தடையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

ரிஷபம்:

இன்று உங்களின் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை அடையமுடியாமல் தடைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலிலும் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்டநிறம்நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

மிதுனம்:

இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்கூட்டாளிகள் மற்றும் நண்பர்களால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரியிடம் வீணான கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

அதிர்ஷ்டநிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

கடகம்:

இன்று உத்தியோக உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் தடைகளுக்குப்பின் கிடைக்கும். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. பேசும் போது வார்த்தைகளை கோர்த்துப் பேசுவது நல்லது. அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் மட்டுமே பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்:  5, 6

சிம்மம்:

இன்று தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். தராசுத்தட்டில் இட்ட எடைக்கல்லைப்போல ஏற்ற இறக்கமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். செலவுகளும் கட்டுக்கடங்கியிருப்பதால் கடந்தகால கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்:  4, 6

கன்னி:

இன்று பண விஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும்தேவையற்ற அலைச்சல்கள் குறையும். உற்றார்-உறவினர்களும் ஓரளவுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டநிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்:  2, 9

துலாம்:

இன்று தொழில், வியாபாரத்திலும் அவ்வளவாக ஏற்றமான பலனை எதிர்பார்க்க முடியாது என்றாலும் தேக்கநிலை அடையாது சமாளிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத இடமாற்றங்களால் அவதிக்குள்ளாவார்கள்.

அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்:  9, 3

விருச்சிகம்:

இன்று கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களிடம் பேச்சைக் குறைத்துக்கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும்.

அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

தனுசு:

இன்று எதிலும் எதிர்நீச்சல்போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களது  சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும்  திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களும் சாதகமின்றியே இருப்பார்கள். மனைவிவழியில் மருத்துவச்செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்:  5, 6

மகரம்:

இன்று பொருளாதாரநிலையில் சங்கடங்களையே சந்திப்பீர்கள். சிலருக்குக் கேட்டஇடத்தில் கடன் தொகை கிடைப்பதில்கூட தடைகள் ஏற்படும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.குடும்பத்திலும் வீண் வாக்குவாதங்களும், ஒற்றுமைக் குறைவுகளும் ஏற்படும். உற்றார்-உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்:  3, 7

கும்பம்:

இன்று அசையா சொத்துவகையில் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் உண்டாகும். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமற்ற நிலைகளால் அபிவிருத்திக் குறையும். கூட்டாளிகளும் ஒற்றுமையின்றி செயல்படுவார்கள்.

அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7

மீனம்:

இன்று அரசியல்வாதிகள் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே பதவியினைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.

அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5

Trending News

Latest News

You May Like