06-07-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசி பலன்

06-07-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
X

06-07-2016-newstm-daily-rasipalan-astrology

06-07-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

6-Jun-19 விகாரி வருஷம்
உத்தராயணம் வஸந்தருது
வைகாசி - 23 வியாழக்கிழமை

திரிதியை பகல் 11.48 மணி வரை. பின் சதுர்த்தி
புனர்பூசம் இரவு 10.30 மணி வரை பின் பூசம்
அமிர்த யோகம்
நாமயோகம்: வ்ருத்தி
கரணம்: கரஜை

அகஸ்: 31.31
த்யாஜ்ஜியம்: 13.01
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 1.36
சூரிய உதயம்: 5.53


ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சதுர்த்தி விரதம்.
கதளி கௌரி விரதம்.
சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் காலை பூச்சப்பர்த்திலும் இரவு விருஷப வாகனத்திலும் புறப்பாடு.
தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு.
நம்பியாண்டார் நம்பி திருநட்சத்திரம்.
சுபமுகூர்த்த தினம்.

திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்


சூரியன் ரோகிணி 4ம் பாதம் - பகை
சந்திரன் மிதுனம் - நட்பு
செவ்வாய் திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
புதன் திருவாதிரை 2ம் பாதம் - நட்பு
குரு கேட்டை 4ம் பாதம் - பகை
சுக்ரன் கிருத்திகை 2ம் பாதம் - ஆட்சி
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு புனர்பூசம் 2ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 4ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - சுகஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை  ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9  ரிஷபம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுகஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.  சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3  மிதுனம்: கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை  அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். மற்றவர்களால் ஏற்படும்  தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக  செயல்படுவது நல்லது. எதிர்ப்புகள் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7  கடகம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்  - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9  சிம்மம்: கிரகநிலை: ராசியில் சந்திரன்  - சுகஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம்  கொடுத்து பேசுவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  கன்னி: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய்- விரைய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல்  பணியாற்ற  வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  துலாம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய வாரமாக அமையும். சக பணியாளார்கள் உங்களுக்கு தொல்லை தருவதாக அமையும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9  விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில்  செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6  தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - களத்திர  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  - விரைய ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெண்கள்  அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது சிறந்தது. அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் பொறுமையை கடைப்பிடித்து வெற்றி காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7  மகரம்: கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றிதான். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். பெண்கள் சிறிய அளவில்  நன்மையையும், பொறுமையையும் பெறக்கூடிய கால கட்டம், வேண்டிய அளவில்கிடைக்காவிட்டாலும் ஒரு சிறிய சன்மானம் உங்களுக்கு கிடைக்கும்.   அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9  மீனம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணபுழக்கம் திருப்தி தரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு யாரிடமும் எந்த ரகசியத்தையும் சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் தொல்லை தலைதூக்கலாம். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7  

newstm.in

Tags:
Next Story
Share it