1. Home
  2. ஜோதிடம்

05-09-2020 - தினப்பலன்: இந்த 5 ராசிக்கு நல்ல பலன் கிடைக்கப்போகிறது

05-09-2020 - தினப்பலன்: இந்த 5 ராசிக்கு நல்ல பலன் கிடைக்கப்போகிறது

05-09-2020 - தினப்பலன்: இந்த 5 ராசிக்கு நல்ல பலன் கிடைக்கப்போகிறது

கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சுக்ரன்   - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
இன்று பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞசர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். நீங்கள் எதிர்பார்த்தபடி மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களை நம்பி சில முக்கிய காரியங்களை கட்சி மேலிடம் உங்களிடம் ஒப்படைப்பார்கள்.

கிரகநிலை:
ராசியில்  ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில்  சூர்யன் - பஞ்சம  ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் -  விரைய ஸ்தானத்தில் செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும்.  மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள்  நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று துன்பமும், தொல்லையும்  நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும். ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்து சேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம்  தவறி உணவு  உண்ண வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.
 

கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் - தைரிய  ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண, ருண ஸ்தானத்தில்  குரு (வ), சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும்.  சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மன மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். அரசியல் துறையினருக்கு அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.

கிரகநிலை:
ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் புதன் - சுகஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில்  குரு (வ), சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில்  ராஹூ - விரைய ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன
பலன்:
இன்று சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது.  வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளி போகலாம். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.

கிரகநிலை:
ராசியில் புதன் - தைரிய ஸ்தானத்தில் கேது - சுக  ஸ்தானத்தில்  குரு (வ), சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில் சுக்ரன்  - விரைய ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். பணி நிமித்தமாக நேரத்திற்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த  போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க  பெறுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு - மனை - வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் -  அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்  - லாப ஸ்தானத்தில்  சூர்யன்   - அயன சயன போக  ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
இன்று பேச்சு திறமையால் காரியங்களை  சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம்  போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும்.

கிரகநிலை:
ராசியில் கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில்  சூர்யன் - லாப   ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்.  அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும்.
 

கிரகநிலை:
ராசியில்  குரு (வ), சனி (வ) - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  ராஹு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன் -   தொழில்  ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால்  உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை  விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை  படிப்பது வெற்றிக்கு உதவும். உடல் ஆரோக்கியம் பெறும். வேலை பளு குறையும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -  பஞ்சம  ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன் -  பாக்கிய  ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன, சயன,  போக ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும்.

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  சுக ஸ்தானத்தில்  ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன் - அஷ்டம  ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். அரசியல் துறையினருக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.

கிரகநிலை:
ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய்  - தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சூர்யன் - களத்திர  ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில்  ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான  முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள்  மத்தியில்  மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர் நலனில்  அக்கறை காட்டுவீர்கள். வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like