1. Home
  2. ஜோதிடம்

04-11-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்களுக்குஅயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

04-11-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்களுக்குஅயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

04-11-2018-newstm-daily-free-astrology

04-11-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்களுக்குஅயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I சரத்ருது I ஐப்பசி 18 I இங்கிலீஷ்: 04 November 2018 Iஞாயிற்றுக்கிழமை

துவாதசி இரவு 1.21 மணி வரை. பின் த்ரயோதசி I உத்திரம் இரவு 10.09 மணி வரை. பின் ஹஸ்தம்

வைத்ருதி நாமயோகம் I கௌலவம் கரணம் I அமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 0.02 I அகசு: 29.01I நேத்ரம்: 0 I ஜீவன்: ½ I துலாம் லக்ன இருப்பு: 7.00 I சூர்ய உதயம்: 6.08

ராகு காலம்: மாலை 4.30 - 6.00 I எமகண்டம்: மதியம் 12.00 - 1.30 Iகுளிகை: மதியம் 3.00 - 4.30 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:இன்று மேல்நோக்கு நாள் I வீரவநல்லூர் ஸ்ரீசுவாமி அம்பாள் ஊஞ்சல் உற்ஸவ சேவைI இன்று ஆரோக்ய ஸ்நானம், கண்ணூறு கழித்தல் செய்ய நன்றுI சூரிய வழிபாடு சிறப்பு.

திதி: துவாதசி Iசந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6ரிஷபம்: இன்று சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவீர்கள் அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6மிதுனம்: இன்று நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 தீபாவளி ஸ்பெஷல் – தீபாவளி - தித்திக்கும் ஒளி-ஒலி சங்கமம்கடகம்: இன்று கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7சிம்மம்: இன்று தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5கன்னி: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை  எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5 தீபாவளி ஸ்பெஷல் - எத்தனை மணிக்கு எண்ணெய்க்குளியல் – வழிகாட்டிய மஹா பெரியவர்துலாம்: இன்று ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3விருச்சிகம்: இன்று ஆன்மீக நாட்டம் உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9தனுசு: இன்று .எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். மாணவர்களுக்கு:  கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 தீபாவளி ஸ்பெஷல் - கங்கா ஸ்நானம் ஆச்சா?மகரம்: இன்று வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கும்பம்: இன்று சுப காரியங்கள் குடும்பத்தில் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மற்றும் ஒரு நல்ல நாள். தீடீரென உறவுகள் வந்து ஆச்சரியப் பட வைப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9மீனம்: இன்று நினைத்ததை சாதிப்பீர்கள். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வதால் வாழ்க்கைத்துணையின் பாராட்டை பெறுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like