1. Home
  2. ஜோதிடம்

04-10-2018 தினப்பலன் -மாணவர்களின் அறிவு திறன் பளிச்சிடும் நாள் இன்று

04-10-2018 தினப்பலன் -மாணவர்களின் அறிவு திறன் பளிச்சிடும் நாள் இன்று

04-10-2018-newstm-daily-free-astrology

04-10-2018 தினப்பலன் -மாணவர்களின் அறிவு திறன் பளிச்சிடும் நாள் இன்று

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I புரட்டாசி 18 I இங்கிலீஷ்: 04October 2018 I வியாழக்கிழமை

தசமி இரவு 7.58 மணி வரை. பின் ஏகாதசி I பூசம் இரவு 7.47 மணி வரை. பின் ஆயில்யம்

சிவம் நாமயோகம் I வணிஜை கரணம் Iஅமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: அகசு: 29.43 I நேத்ரம்: 1 I ஜீவன்: ½ I கன்னி லக்ன இருப்பு: 7.01 I சூர்ய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00 I எமகண்டம்: காலை 6.00 - 7.30 I குளிகை: காலை 9.00 - 10.30 I சூலம்: தெற்கு I பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:இன்று மேல்நோக்கு நாள் I சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

திதி: தசமி I சந்திராஷ்டமம்: பூராடம், உத்திரம்

குரு பெயர்ச்சி 2018-19: உங்கள் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்!

மேஷம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் ராகு, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5ரிஷபம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6மிதுனம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  குரு, சுக்ரன், புதன் - களத்திர ஸ்தானத்தில்  சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் ஏற்படும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 வரும் குரு பெயர்ச்சிக்கு, இந்த தலம் செல்வோமே....கடகம்: கிரகநிலை: ராசியில் ராகு, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் -  சுக ஸ்தானத்தில்  குரு, சுக்ரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மனமகிழ்ச்சியை உண்டாகும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில்வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9சிம்மம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும்.   பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9கன்னி: கிரகநிலை: ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன், புதன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் ராகு, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9துலாம்: கிரகநிலை: ராசியில் குரு, சுக்ரன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் முன்னேறும். குடும்ப பிரச்சனை தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன்  வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6 தினம் ஒரு மந்திரம் - குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்விருச்சிகம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி -  தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6தனுசு: கிரகநிலை: ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல்  இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6மகரம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில்  குரு, சுக்ரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.  மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும்பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9    கும்பம்: கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில்  குரு, சுக்ரன், புதன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 உங்கள் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!மீனம்: கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சுக்ரன், புதன் - தொழில்  ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. திடமான மனதுடன் உங்கள் பணிகளைச் செய்வது வெற்றியை தரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

newstm.in

Trending News

Latest News

You May Like