1. Home
  2. ஜோதிடம்

04-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எதிர்பார்த்த லாபம் வரும்

04-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எதிர்பார்த்த லாபம் வரும்

04-09-2019-newstm-daily-astrology

04-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் எதிர்பார்த்த லாபம் வரும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

4-Sep-19
விகாரி வருஷம் தக்ஷிணாயணம்
வர்ஷருது ஆவணி - 18
புதன்கிழமை

சஷ்டி மறு நாள் காலை 4.15 மணி வரை. பின் ஸப்தமி
ஸ்வாதி பகல் 11.36 மணி வரை பின் விசாகம்
சித்த யோகம்
நாமயோகம்: மாஹேந்த்ரம்
கரணம்: கௌலவம்

அகஸ்: 30.27
த்யாஜ்ஜியம்: 27.22
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 2.18
சூரிய உதயம்: 6.06


ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
ஷஷ்டி விரதம்.
மதுரை ஸ்ரீசொக்கலிங்கப்பெருமான் தருமிக்கு பொற்கிழி அருளியக் காட்சி.
தங்கச் சப்பரத்தில் யானை வாகனத்தில் திரு வீதி வுலா.
ஸ்ரீநரஸிம்ம மூலவருக்கு திருமஞ்சன ஸேவை.
சுபமுகூர்த்தம்.
திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி
சூரியன்
பூரம் 2ம் பாதம் - ஆட்சி
சந்திரன்
துலாம் - பகை
செவ்வாய்
பூரம் 1ம் பாதம் - பகை
புதன்
பூரம் 4ம் பாதம் - பகை
குரு
கேட்டை 2ம் பாதம் - பகை
சுக்ரன்
பூரம் 3ம் பாதம் - பகை
சனி
மூலம் 4ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில்  குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 05:02 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும்.   மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால்  உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - சுக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் -  ரண ருண ஸ்தானத்தில்சந்திரன் - களத்திர ஸ்தானத்தில்  குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 05:02 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கைகொடுக்கும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை நீங்கும்.  எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். வீண் அலைச்சல் குறையும்.    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9மிதுனம்: கிரகநிலை: ராசியில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 05:02 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம்  உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம்  கோபமான வார்த்தைகளை பேசாமல்  சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும்.   அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9கடகம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில்  சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ஸ்தானத்தில் சனி , கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.. மறு நாள் காலை 05:02 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும்.  வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும்.    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9சிம்மம்: கிரகநிலை: ராசியில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் - சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 05:02 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.   அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5கன்னி: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - தொழில் ஸ்தானத்தில்   ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 05:02 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள்  பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6துலாம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.   மறு நாள் காலை 05:02 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். இடையூறுகள் விலகும். தர்ம குணமும், இரக்க சிந்தனையும் மேலோங்கும். எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும்.   அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு-  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் - அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 05:02 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில் வியாபாரம்  தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது.    அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது - கஸத்திர ஸ்தானத்தில்  ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் -  லாப  ஸ்தானத்தில்  சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில்   குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  மறு நாள் காலை 05:02 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். அறிவுத் திறன் கூடும். பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3மகரம்: கிரகநிலை: ரண ருண ஸ்தானத்தில்  ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன் -  லாப ஸ்தானத்தில்  குரு  - அயன சயன போக ஸ்தானத்தில்   சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 05:02 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6  கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில்  சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 05:02 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். ஆடை ஆபரணத்தையும் அலங்காரத்தையும் விரும்புவீர்கள். வீண் மன குழப்பங்கள் ஏற்பட்டாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.   அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6மீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ஸ்தானத்தில்   சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில்  குரு - தொழில்  ஸ்தானத்தில்   சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. மறு நாள் காலை 05:02 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். உடன் பிறந்தோரிடையே உறவு பலப்படும்.   அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7

newstm.in

Trending News

Latest News

You May Like