1. Home
  2. ஜோதிடம்

04-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை சீராக இருக்கும்

04-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை சீராக இருக்கும்

04-05-2019-newstm-daily-astrology

04-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை சீராக இருக்கும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

4-May-19 | விகாரி வருஷம் | உத்தராயணம்
வஸந்தருது | சித்திரை - 21 | சனிக்கிழமை

அமாவாசை மறு நாள் காலை 5.05 மணி வரை. பின் பிரதமை
அசுபதி மாலை 4.25 மணி வரை பின் பரணி
சித்த யோகம் | நாமயோகம்: ஆயுஷ்மான் | கரணம்: சதுஷ்பாதம்

அகஸ்: 31.03 | த்யாஜ்ஜியம்: 15.37 | நேத்ரம்: 0
ஜீவன்: 0 | மேஷ லக்ன இருப்பு (நா.வி): 1.40 | சூரிய உதயம்: 5.57

ராகு காலம்: காலை 9.00 - 10.30 | எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30 | சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு: இன்று சம நோக்கு நாள்
அக்னி நக்ஷத்திர தோஷாரம்பம்.
ஸர்வ அமாவாஸ்யை.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் விடாயாற்று உற்ஸவம்.
திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் விருஷப ஸேவை.

திதி: அமாவாஸ்யை
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

சூரியன் பரணி 2ம் பாதம் உச்சம்
சந்திரன் மேஷம் பகை
செவ்வாய் மிருகசீரிஷம் 2ம் பாதம் நட்பு
புதன் பரணி 1ம் பாதம் நட்பு
குரு மூலம் 1ம் பாதம் ஆட்சி
சுக்ரன் ரேவதி 2ம் பாதம் உச்சம்
சனி பூராடம் 3ம் பாதம் நட்பு
ராகு புனர்பூசம் 2ம் பாதம் நட்பு
கேது பூராடம் 4ம் பாதம் நட்பு

இன்று நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். அதனால் மன நிறைவைத் தரும். உடல் உபாதைகள் உஷ்ணம் சம்மந்தப் பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பண தேவை உண்டாகும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 இன்று வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு நிறுவன மாற்றமோ, அல்லது ஊர் மாற்றமோ ஏற்படக் கூடும். அதனால் உங்களுக்கு நன்மையே ஏற்படும். வருமானமும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7இன்று கடின உழைப்பு இருக்கும். அதற்கான முன்னேற்றம் இருப்பதால் அது பற்றி கவலைப் பட வேண்டி இருக்காது. மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு நல்லபடியாக இருக்கும். கடன் வாங்க வேண்டி வரலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.  புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எந்த  ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள்.  சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5இன்று சூழ்நிலை காரணமாக மனச் சங்கடம் ஏற்படும். மற்றவர்களுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பீர்கள். அதனால் மன உளைச்சல் அதிகமாகும். வருமானத்திற்கு குறைவிருக்காது. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9இன்று வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். தக்க சமயத்தில் ஒருவருக்கு உதவி புரிவீர்கள். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். உடல் சோர்வு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 இன்று சிலரிடம் கண்டிப்பாக நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்தமான ஆலயத்திற்குச் சென்று வருவீர்கள். விலையுயர்ந்த பொருள் ஒன்றை பரிசாக பெறுவீர்கள். வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம்  செய்பவர்கள்  கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளுக்காக  செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.  வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5இன்று எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். கணவன், மனைவி ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து போவது பிரச்சினைகளை தவிர்க்கும். தெய்வத்தை வழிபட நன்மைகள் நடக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள். உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது.   பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும்.  கடன் பிரச்சனை தீரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6இன்று சிறு தடங்கல்கள் வரலாம். நன்மைகளை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். வெளிநாடு செல்ல விரும்புவர்கள் சிறிது காலம் அதை ஒத்திப் போடுவது நல்லது. பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டிய கால கட்டம். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.   நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.  கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6இன்று அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்குத் தக்க வருமானமும், வெகுமதியும் கிடைக்கும். நல்லோர் சிலரை சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பிள்ளைகள்  உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும்.  தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள்  சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9இன்று கணவன் - மனைவியரிடேயே சில ஊடல்கள் வரும். முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டி வரும். வருமானம் திருப்தி கரமாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய  தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9இன்று குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள நேரிடும்.  மனதில் இனம்புரியாத கவலை இருந்து கொண்டிருக்கும். தியானம் செய்ய நிம்மதி கிட்டும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9இன்று பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது  கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்.                 அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6

newstm.in

Trending News

Latest News

You May Like