03-11-2019-newstm-dwstm-daily-astrology

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி - 17
ஞாயிற்றுக்கிழமை
ஸப்தமி மறு நாள் காலை 6.08 மணி வரை. பின் ஸப்தமி தொடர்கிறது.
உத்ராடம் மறு நாள் காலை 4.50 மணி வரை பின் திருவோணம்
அமிர்த யோகம்
நாமயோகம்: த்ருதி
கரணம்: கரஜை
அகஸ்: 29.02
த்யாஜ்ஜியம்: 14.23
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
துலா லக்ன இருப்பு (நா.வி): 2.23
சூரிய உதயம்: 6.08
ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திரிதினஸ்பிரிக்.
திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்ஸவாரம்பம்.
வள்ளியூர் முருகப் பெருமாள் இரவு பல்லக்கு ஸேவை.
சுபமுகூர்த்ததினம்.
திதி: ஸப்தமி
சந்திராஷ்டமம்: திருவாதிரை
சூரியன் |
சுவாதி 3ம் பாதம் - நீசம் |
சந்திரன் |
மகரம் - பகை |
செவ்வாய் |
சித்திரை 1ம் பாதம் - நட்பு |
புதன் |
சுவாதி 1ம் பாதம் - நட்பு |
குரு |
மூலம் 1ம் பாதம் - ஆட்சி |
சுக்ரன் |
அனுஷம் 1ம் பாதம் - நட்பு |
சனி |
பூராடம் 1ம் பாதம் - நட்பு |
ராகு |
திருவாதிரை 3ம் பாதம் - நட்பு |
கேது |
பூராடம் 1ம் பாதம் - நட்பு |
மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 9. 44 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். மாணவமணிகள் அரசு சம்மந்தப்பட்ட பணிகளுக்காக நீங்கள் தேர்வுகள் எதுவும் எழுதியிருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். மனதிற்குரிய சம்பவங்கள் நடக்கக் கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 9. 44 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். சிலர் வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தால் இப்போது குடும்பத்துடன் இணைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 மிதுனம்: கிரகநிலை: ராசியில் ராஹூ - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 9. 44 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தை பொறுத்தவரை நல்ல முன்னேற்றமான வாரம். அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5கடகம்: கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 9. 44 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பணவரத்து அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் வேலைபார்த்து வரும் இடத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களின் பலம் குறைந்து தங்கள் கை ஓங்கி நிற்கும். மற்றவர்கலின் ஆதரவும் கிட்டும்.தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் அனைவருக்கும் தேவையானவற்றை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6சிம்மம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 9. 44 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழிலைப் பொறுத்த் வரையில் சக பாகஸ்தர்களினால் வீண் பிரச்சினைகல் ஏற்படக்கூடும். இருப்பினும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருப்பதால் வெற்றிகரமாகவே அமையும்.வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 கன்னி: கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 9. 44 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்மணிகளுக்கு மன உறுதி அதிகரிக்கும். கற்பனையான பயத்தை மனதில் கொண்டு செல்ல வேண்டாம். தைரியமாக இருங்கள். மாணவர்கள் முழு மனதுடன் படிப்பில் ஆர்வம் காட்டுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 துலாம்: கிரகநிலை: ராசியில் புதன்(வ) , சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 9. 44 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று முற்பகுதியில் இருந்த சூழ்நிலை பிற்பகுதியில் இருக்காது. ஆரோக்கியத்திலும் அவ்வப்போது குறைகள் ஏற்படலாம். குடும்பத்தார் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். தூரத்தில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில் - சூர்யன், புதன்(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 9. 44 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும்.பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 தனுசு: கிரகநிலை: ராசியில் சந்திரன், குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் ராஹு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 9. 44 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பணவரத்து திருப்தி தரும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிருப்தியான நாள் தான். பொறுமையாக இருப்பது மிக அவசியம். மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். வியாபாரத்தில் புது யுக்தியை கையாளுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7மகரம்: கிரகநிலை: ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 9. 44 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அளிக்கும். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வீர்கள் உத்தியோகஸ்த்தர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு இருக்கக் கூடும். சக ஊழியர்களிடம் எல்லை மீறி பழகாமலிருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெகும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 9. 44 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உங்கள் தொழிலில் உங்களுக்கென தனி முத்திரையை பதிப்பீர்கள். சிலருக்கு வாக்கு கொடுக்க வேண்டி நிர்ப்பந்தம் ஏற்படும். மிக அருமையாக உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். பெண்மணிகள் கோபத்தைக் குறைத்துக் கொள்வது பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உதவும். வேலையில் நிம்மதி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9மீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று காலை 9. 44 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வெகுமதியும் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். பெரியோர்களின் ஆசி உண்டாகும். ஆடை, அணிகலன் புதிதாக வாங்குவீர்கள். சிலரின் பொறாமைக்கு ஆளாவீர்கள். உன்னத நிலைக்கு செல்ல வேண்டி மனம் ஏங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3
newstm.in