1. Home
  2. ஜோதிடம்

03-03-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது.

03-03-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது.

03-03-2019-newstm-daily-astrology

03-03-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விளம்பி வருஷம் | தக்ஷிணாயணம் |சிசிரருது
03 March 2019 | மாசி - 19 | ஞாயிற்றுக்கிழமை

துவாதசி மாலை 4.00 மணி பின்னர் திரியோதசி
உத்தராடம் பகல் 11.12 மணி வரை பின் திருஒணம்
அமிர்த யோகம் | வரீயான் நாமயோகம் | தைதுலம் கரணம்

அஹஸ்: 29.33 | தியாஜ்ஜியம்: 22.45 | நேத்ரம்: 0
ஜீவன்: 1/2 | கும்ப லக்ன இருப்பு (நா.வி) - 1.41
சூர்ய உதயம் - 6.31 | சூர்ய அஸ்தமனம் - 6.20

ராகு காலம்: மாலை 4.30 - 6.00 | எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30 | சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு: இன்று மேல் நோக்கு நாள்
பிரதோஷம்.
திருவோணவிரதம்.
கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பிறந்த நாள்.
சுபமுகூர்த்த தினம்.

திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: புனர்பூசம்.

கிரகம் பாத சாரம் நிலை

சூரியன் சதயம் 4ம் பாதம் நட்பு
சந்திரன் மகரம் பகை
செவ்வாய் பரணி் 2ம் பாதம் ஆட்சி
புதன் பூரட்டாதி 2ம் பாதம் நட்பு
குரு கேட்டை 4ம் பாதம் பகை
சுக்கிரன் உத்தராடம் 4ம் பாதம் நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் நட்பு
ராகு புனர்பூசம் 3ம் பாதம் நட்பு
கேது உத்தராடம் 1ம் பாதம் நட்பு

இன்று மிகச் சிறந்த பலன்களை உழைப்பின் மூலம் அடையும் நாளிது. நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9இன்று உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு  நிம்மதியை தரும் அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9இன்று பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும்.   சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9இன்று எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7இன்று சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும் அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7இன்று பூர்வ புண்ணி சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தனலாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9இன்று உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9இன்று படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் சொந்தங்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன்  அனுசரித்துச் செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9இன்று தொழிலில் உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். போட்ட திட்டங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த தன வருவாய் சிக்கல்களை மெல்ல மெல்ல சமாளிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5இன்று வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். பண விஷயங்கள் தாராளமயமாக இருக்கும். இருந்தபோதும் ராசியைப் பார்க்கும் கேதுவால் அவ்வப்போது சிற்சில வேளைகளில் கையைப் பிசைந்து கொண்டு இருப்பீர்கள். தொழிலில் உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும் அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9இன்று நீங்கள் படும் கஷ்டம் வெளியே தெரியாது. நீங்கள் எபோதுமே பிறர் கண்ணுக்கு சௌகரியமான வாழ்க்கை வாழும் ஆளாகத் காட்சி தருவீர்கள். நீங்கள் யாரிடமும் உங்களது குறைகளைத் தெரிவித்துக் கொள்ள மாட்டீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

newstm.in

Trending News

Latest News

You May Like