1. Home
  2. ஜோதிடம்

02-10-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்கள் பேச்சில் இனிமை கூட்டினால் நன்மை விளையும்

02-10-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்கள் பேச்சில் இனிமை கூட்டினால் நன்மை விளையும்

02-10-2018-newstm-daily-free-astrology

02-10-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்கள் பேச்சில் இனிமை கூட்டினால் நன்மை விளையும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் Iதக்ஷிணாயணம் Iவர்ஷருது Iபுரட்டாசி 16 Iஇங்கிலீஷ்:02 October 2018 Iசெவ்வாய்க்கிழமை

அஷ்டமி இரவு 12.42 மணி வரைI பின் நவமி திருவாதிரை இரவு 11.01 மணி வரை I பின் புனர்பூசம்

வரியான் நாமயோகம் I பாலவம் கரணம் I மரண யோகம்

தியாஜ்ஜியம்: 5.40 I அகசு: 29.46 I நேத்ரம்: 1I ஜீவன்: ½ I கன்னி லக்ன இருப்பு: 7.07 I சூர்ய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 I எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு:இன்று மேல்நோக்கு நாள் I கரிநாள்

திதி: அஷ்டமி Iசந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

குரு பெயர்ச்சி 2018-19: உங்கள் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்!

மேஷம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுகஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும்.  புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9ரிஷபம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.  கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9மிதுனம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  குரு, சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில்  சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும்.  எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 சிவ பூஜையில் கரடியா?கடகம்: கிரகநிலை: ராசியில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் -  சுக ஸ்தானத்தில்  குரு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், கேது -  அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணதேவை அதிகரிக்கும்.  வீண்செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம்  உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6சிம்மம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும்.  வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9கன்னி: கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7துலாம்: கிரகநிலை: ராசியில் குரு, சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுகஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 உங்களுக்கு நாகதோஷம் உள்ளதா ?விருச்சிகம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி -  தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5தனுசு: கிரகநிலை: ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம்  தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மகரம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில்  குரு, சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 உங்கள் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!கும்பம்: கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில்  குரு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மீனம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான  காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும்.  புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

newstm.in

Trending News

Latest News

You May Like