1. Home
  2. ஜோதிடம்

02-08-2019 தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

02-08-2019 தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

02-08-2019-newstm-daily-astrology

02-08-2019 தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

2-Aug-19 விகாரி வருஷம்
தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது
ஆடி - 17 வெள்ளிக்கிழமை

பிரதமை காலை 7.07 மணி வரை. பின் துவிதியை. துவிதியை மறு நாள் காலை 4.42 மணி வரை. பின்னர் திரிதியை.
ஆயில்யம் பகல் 12.07 மணி வரை பின் மகம்
மரண யோகம்
நாமயோகம்: வ்யதீபாதம்
கரணம்: பவம்

அகஸ்: 31.08 த்யாஜ்ஜியம்: 43.02
நேத்ரம்: 0
ஜீவன்: 0
கடக லக்ன இருப்பு (நா.வி): 2.41
சூரிய உதயம்: 6.05


ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சந்திர தரிசனம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணாடிச் சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள் மடி மீது ஸ்ரீரெங்கமன்னார் ஸயனத்திருக்கோலமாய்க் காட்சியருளல்.


திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: திருவோணம் , அவிட்டம்
சூரியன் பூசம் 4ம் பாதம் - பகை
சந்திரன் சிம்மம் - பகை
செவ்வாய் ஆயில்யம் 3ம் பாதம் - நீசம்
புதன் புனர்பூசம் 3ம் பாதம் - நட்பு
குரு கேட்டை 2ம் பாதம் - பகை
சுக்ரன் பூசம் 3ம் பாதம் - பகை
சனி பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு புனர்பூசம் 1ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 3ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - சுகஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  குரு (வ)  - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. சுகஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள்  நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக் கடந்த காலங்களில் இருந்து வந்த தடைகள், போட்டிகள், முன்னேற்றமற்ற  நிலை போன்ற யாவும் விலகி நல்ல மேன்மை உண்டாகும். லாபத்தையும் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7  ரிஷபம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன்  - களத்திர ஸ்தானத்தில்  குரு (வ)  - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. தைரிய ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று புதிய வாகனம் சேரும். ஆபரணங்கள் சேர்க்கை சேரும்.   தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். அலுவலகம் செல்வோருக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெண்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கணவர் மற்றும் புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள்  உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7  மிதுனம்: கிரகநிலை: ராசியில் புதன்,  ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு (வ)  - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கலைத்துறையினருக்கு எதிலும் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடம்  சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  கல்விக்காக எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றி கிட்டும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். மனதில் உற்சாகம் பெருகும். உதவி செய்யாத சகோதரர்கள் முன்வந்து உதவுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5  கடகம்: கிரகநிலை: ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில்  குரு (வ)  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் புதன்,  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. ராசியில் இருக்கும் சந்திரன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு  மாறுகிறார் பலன்: இன்று ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.  அரசியல் துறையினருக்கு மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக  இருப்பது நல்லது. குடும்பத்தில் பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை  ஆபரணம் சேரும். கடன்கள் அனைத்தும் குறையும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5  சிம்மம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில்  குரு (வ)  - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - விரைய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. விரையஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று புதிய ஒப்பந்தங்கள் எதில் கையெழுத்திடுவது என்றாலும் அதிலுள்ள ஷரத்துகளை கவனமாக படித்து பின் கையோப்பமிடவும். எதை செய்வதாயிருந்தாலும் தகுந்த ஆலோசனை பெறவும். தொழிலதிபர்கள் தொழிலாளிகளின் ஒற்றுமையால் இரண்டு பங்கு லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளின் கடன்  பாக்கிகள் வசூலாகி, வியாபாரமும் லாபத்தோடு நடக்கும். அரசியல்வாதி கள் பொதுமக்களிடையே நல்ல பெயர் எடுப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3  கன்னி: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில்  குரு (வ)  - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - லாப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. லாப ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் விரையஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவர்களின் ஆதரவால் வெற்றிகள் கிடைக்கும். ஆசிரியர்களின்  ஆதரவு இருக்கும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளின் அரவணைப்பையும் பாராட்டையும் பெறுவார்கள். உடன் பணிபுரியும் பெண்  ஊழியர்களிடம் எச்சரிக்கை தேவை. மாணவ- மாணவியர் கல்வியில் நல்ல மேன்மையான நிலைகள் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  துலாம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  குரு (வ)  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது -  பாக்கிய ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  தனது நிதானத்தால் அனைவரையும் வசீகரிப்பீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குக் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தக்கசமயத்தில் அமைந்து அதிகாரிகளின்  பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு (வ)  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும்.  குடும்பத்தில் எதிர்ப்புகள் விலகும். உடன்பிறந்த சகோதரர்கள், உங்கள் பேச்சைமீறி நடக்கலாம். சொத்துப்பிரச்சினை  வரும். உற்றார்-உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - களத்திர  ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில்  குரு (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன. அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கூட்டு வியாபாரம் அனுகூலத்தைத் தரும். எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும்  திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலை நடவடிக்கைகளை நேரடியாக கவனித்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.  வியாபாரிகள் அதிக கொள்முதல் செய்யாமல் இருப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  மகரம்: கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில்  குரு (வ)  - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. சப்தம ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை  குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். குடும்ப விவாவதத்தில் கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. குடும்பத்தில் வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். விலகியிருந்த பிள்ளைகள் வந்து சேர்வார்கள். காலங்காலமாய்  இருந்து வந்த பங்காளி சண்டை முடிவுக்கு வரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9  கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில்  குரு (வ)  - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. ரண ருண ரோக ஸ்தானத்தில்இருக்கும் சந்திரன் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினர்  அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். பணியில் தடை  ஏற்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6  மீனம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் புதன்,  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில்  குரு (வ)  - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.  பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.  சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி  மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9  

newstm.in

Trending News

Latest News

You May Like