02-10-2024 - இன்றைய ராசி பலன் - இன்று சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள்..!
மேஷம்:
இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7
ரிஷபம்:
இன்று புதிய வாகனம் சேரும். ஆபரணங்கள் சேர்க்கை சேரும். தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். அலுவலகம் செல்வோருக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7
மிதுனம்:
இன்று கலைத்துறையினருக்கு எதிலும் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடம் சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5
கடகம்:
இன்று ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
சிம்மம்:
இன்று புதிய ஒப்பந்தங்கள் எதில் கையெழுத்திடுவது என்றாலும் அதிலுள்ள ஷரத்துகளை கவனமாக படித்து பின் கையோப்பமிடவும். எதை செய்வதாயிருந்தாலும் தகுந்த ஆலோசனை பெறவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3
கன்னி:
இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவர்களின் ஆதரவால் வெற்றிகள் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
துலாம்:
இன்று பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனது நிதானத்தால் அனைவரையும் வசீகரிப்பீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
விருச்சிகம்:
இன்று பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
தனுசு:
இன்று கூட்டு வியாபாரம் அனுகூலத்தைத் தரும். எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
மகரம்:
இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். குடும்ப விவாவதத்தில் கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
கும்பம்:
இன்று சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினர் அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
மீனம்:
இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9