1. Home
  2. ஜோதிடம்

02-09-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் !!

02-09-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் !!

02-09-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் !!

கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சுக்ரன்   - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
இன்று வியாபார நிமித்தமாக  சில முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

கிரகநிலை:
ராசியில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில்  சூர்யன் - பஞ்சம  ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் -  விரைய ஸ்தானத்தில் செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.


பலன்:
இன்று மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்  சொல்வதை  கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை  சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று பெண்களுக்கு எந்த முயற்சியிலும்  சாதகமான  பலன் கிடைப்பதில் தாமதமாகும். கலைத்துறையினருக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும். அரசியலில் உள்ளவர்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு  கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பணவரவு நான்றாக இருக்கும். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும்.

கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் - தைரிய  ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண, ருண ஸ்தானத்தில்  குரு (வ), சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

கிரகநிலை:
ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில்  குரு (வ), சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில்  ராஹூ - விரைய ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். எடுத்த காரியங்களில் இருந்து வந்த  தடை தாமதம் நீங்கும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த மனம் வருந்தும்படியான நிலை மாறும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும்.

கிரகநிலை:
ராசியில் புதன் - தைரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய் - பாக்கிய  ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில் சுக்ரன்  - விரைய ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும்.

கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் -  அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்  - லாப ஸ்தானத்தில்  சூர்யன்   - அயன சயன போக  ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

பலன்:
இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். அதே வேளையில் அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும்.

கிரகநிலை:
ராசியில் கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - சுகஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  செவ்வாய் - களத்திர  ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில்  சூர்யன் - லாப   ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் நீங்கும். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். சக ஊழியர்களுடன்  சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும்.

கிரகநிலை:
ராசியில்  குரு (வ), சனி (வ) - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  ராஹு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன் -   தொழில்  ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சொத்துக்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன் -  பாக்கிய  ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன, சயன,  போக ஸ்தானத்தில்  குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

கிரகநிலை:
ராசியில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  சுக ஸ்தானத்தில்  ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன் - அஷ்டம  ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று உடல் சோர்வு நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும்.
 

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய்  - தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சூர்யன் - களத்திர  ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில்  ஸ்தானத்தில் குரு (வ), சனி (வ) - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவீர்கள். மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.  நீண்ட காலமாக இருந்து வந்த கவலைகள் அகலும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும்.

newstm.in

Trending News

Latest News

You May Like