1. Home
  2. ஜோதிடம்

01-11-2018 தினப்பலன்-இன்று எந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்து காணப்படும் ?

01-11-2018 தினப்பலன்-இன்று எந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்து காணப்படும் ?

01-11-2018-newstm-daily-free-astrology

01-11-2018 தினப்பலன்-இன்று எந்த ராசிக்காரர்களுக்கு பண வரத்து காணப்படும் ?

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I சரத்ருது I ஐப்பசி 15 I இங்கிலீஷ்: 01 November 2018 I வியாழக்கிழமை

அஷ்டமி காலை 9.46 மணி வரை. பின் நவமி Iஆயில்யம் இரவு 2.15 மணி வரை. பின் மகம்

சுபம் நாமயோகம் I கௌலவம் கரணம் I சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 24.10 I அகசு: 29.05 I நேத்ரம்: 1I ஜீவன்: ½ I துலாம் லக்ன இருப்பு: 7.12 I சூர்ய உதயம்: 6.08

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00 I எமகண்டம்: காலை 6.00 - 7.30 I குளிகை: காலை 9.00 - 10.30 I சூலம்: தெற்கு I பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:இன்று கீழ்நோக்கு நாள் I திருநெல்வேலி அன்னை ஸ்ரீகாந்திமதியம்மன் ரதோற்சவம்.I மாலை சிவபூஜை செய்தருளல்.

திதி: நவமி I சந்திராஷ்டமம்: உத்திராடம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்:  இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு                                              அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9ரிஷபம்:  இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு                                          அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7மிதுனம்:  இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும்.  கணவன் மனைவிக்கிடையே  இருக்கும் நெருக்கம் குறையும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு                                             அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 அமாவாசை அன்று இதையெல்லாம் செய்யாதீர்கள் !கடகம்:  இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடவுள் பக்தி  அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை                                             அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9சிம்மம்: இன்று வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை                                     அதிர்ஷ்ட எண்கள்: 5, 9கன்னி : இன்று  கொடுக்கல், வாங்கல்,  சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்                                                   அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7 யம தீபம் எப்படி ஏற்ற வேண்டும் ?துலாம்:  இன்று கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.   அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை                                           அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5விருச்சிகம்: இன்று  எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை  அப்படியே  ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்                               அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 தனுசு: இன்று எந்த காரியத்தையும்  செய்து முடிக்கும்  திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்                               அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 யம தீபம் ஏற்றும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்மகரம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பும் போது கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்                                       அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கும்பம்:  இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள்.  விசேஷ நிகழ்ச்சிகளில்  குடும்பத்தினருடன்  கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை                              அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5மீனம்: இன்று பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.  திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மனோதைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்                                  அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like