01-06-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பொருள்வரத்து அதிகரிக்கும்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசி பலன்

01-06-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பொருள்வரத்து அதிகரிக்கும்
X

01-06-2019-newstm-daily-astrology

01-06-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பொருள்வரத்து அதிகரிக்கும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

1-Jun-19 | விகாரி வருஷம் | உத்தராயணம்
வஸந்தருது | வைகாசி - 18 | சனிக்கிழமை

திரயோதசி மாலை 5.10 மணி வரை. பின் சதுர்த்தசி
பரணி இரவு 12.53 மணி வரை பின் கார்த்திகை
சித்த யோகம் | நாமயோகம்: சோபனம் |கரணம்: வணிஜை

அகஸ்: 31.29 | த்யாஜ்ஜியம்: 10.16 | நேத்ரம்: 0 | ஜீவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 2.25 | சூரிய உதயம்: 5.52

ராகு காலம்: காலை 9.00 - 10.30 | எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30 | சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு: இன்று கீழ் நோக்கு நாள்
மாத சிவராத்திரி.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமான் அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்ய நன்று.
கழற்சிங்க நாயனார் குருபூஜை.

திதி: திரயோதசி
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

சூரியன் ரோகிணி 2ம் பாதம் - பகை
சந்திரன் மேஷம் - பகை
செவ்வாய் திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
புதன் மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
குரு கேட்டை 4ம் பாதம் - பகை
சுக்ரன் பரணி 4ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு புனர்பூசம் 2ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 4ம் பாதம் - நட்பு

கிரகநிலை: ராசியில் சந்திரன்,  சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து  உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வீடு, மனை, வாகனம் போன்ற விசயங்கள் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5  கிரகநிலை: ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று  தொழில், வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9கிரகநிலை: ராசியில் செவ்வாய், புதன், ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் - விரைய ஸ்தானத்தில்  சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பண தேவை உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் - லாப ஸ்தானத்தில்  சூர்யன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். உடனிருப்பவர்கள் ஆதரவு தருவார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கிரகநிலை: சுக ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில்  சூர்யன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். தூரத்திலிருந்து உறவினர்கள் இல்லத்திற்கு வந்து போவார்கள். ஒருவருக்கு விட்டுக் கொடுத்து போவது மனதிற்கு நிம்மதியைத் தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மேல் அதிகாரிகளிடமிருந்து பாராட்டு பெறுவீர்கள். வேலையில் நிம்மதி உண்டாகும். தாய் தந்தையரின் அன்பு கிட்டும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7கிரகநிலை: ராசியில் குரு (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எந்த  ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் எதிர்பார்த்தபடியே நன்கு நடந்து முடியும். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். வாக்கை நிறைவேற்ற கஷ்டப்பட வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - விரைய ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் மனதில் நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் சீட் கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். சீரான பண வரவு இருக்கும். நண்பர்களால் இல்லத்தில் மனக் கசப்பு ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் - சுக ஸ்தானத்தில்  சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். குல தெய்வத்தை பிரார்த்தனை செய்து பின் எந்த ஓரு காரியத்தையும் நிறைவேற்றுங்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில்  சூர்யன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம்  செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப் பளு கூடும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6

newstm.in

Tags:
Next Story
Share it