1. Home
  2. ஜோதிடம்

(01-09-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய பொதுபலன்கள்

(01-09-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய பொதுபலன்கள்

(01-09-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய பொதுபலன்கள்

கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சுக்ரன்   - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் தன ஸ்தானத்திற்கும், கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்.
பலன்:
இன்று வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில்  சூர்யன் - பஞ்சம  ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் -  விரைய ஸ்தானத்தில் செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் ராசிக்கும், கேது பகவான் களத்திர ஸ்தானத்திற்கும், மாறுகிறார்.


பலன்:
இன்று விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். அரசியல்துறையினருக்கு கட்சிப் பிரச்சனைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  விளையாட்டுகளில் பரிசுகள் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் ஆராய்ந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நன்மை அளிக்கும். வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும்.

கிரகநிலை:
ராசியில்  ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கும், கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும், மாறுகிறார்.


பலன்:
இன்று தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். பெண்களுக்கு கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்துறையினரின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர்.

கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் - தைரிய  ஸ்தானத்தில் புதன் - ரண, ருண ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் லாப ஸ்தானத்திற்கும், கேது பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கும், மாறுகிறார்.


பலன்:
இன்று மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். மேற்படிப்பிற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிலும் பொறுமை நிதானம் அவசியம். தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும்.

கிரகநிலை:
ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  ராஹூ - விரைய ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் தொழில் ஸ்தானத்திற்கும், கேது பகவான் சுக ஸ்தானத்திற்கும், மாறுகிறார்.


பலன்:
இன்று உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினர் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும். ஆசிரியர் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

கிரகநிலை:
ராசியில் புதன் - சுக  ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில் சுக்ரன்  - விரைய ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும், கேது பகவான் தைரிய ஸ்தானத்திற்கும், மாறுகிறார்.


பலன்:
இன்று எத்தனை தடை வந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காண்பீர்கள். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்  - லாப ஸ்தானத்தில்  சூர்யன்   - அயன சயன போக  ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும், கேது பகவான் தன ஸ்தானத்திற்கும், மாறுகிறார்.


பலன்:
இன்று பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு பணவரத்து இருக்கும். அரசியல்துறையினர் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் திட்டமிடாவிட்டால் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும்.
 

கிரகநிலை:
 தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - சுகஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில்  சூர்யன் - லாப   ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் களத்திர ஸ்தானத்திற்கும், கேது பகவான் ராசிக்கும், மாறுகிறார்.


பலன்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும்.

கிரகநிலை:
ராசியில்  கேது, குரு (வ), சனி (வ) - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில்  ராஹு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன் -   தொழில்  ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும், கேது பகவான் விரைய ஸ்தானத்திற்கும், மாறுகிறார்.


பலன்:
இன்று வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -  ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன் -  பாக்கிய  ஸ்தானத்தில் புதன் - அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கும், கேது பகவான் லாப ஸ்தானத்திற்கும், மாறுகிறார்.


பலன்:
இன்று உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். அரசியல்துறையினருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும். மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும்.

கிரகநிலை:
ராசியில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன் - அஷ்டம  ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கும், கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கும், மாறுகிறார்.


பலன்:
இன்று பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சுணக்க நிலை நீங்கும். வீண்பழி மறையும். சில்லறை சண்டைகள் சரியாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் நீங்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சேமிப்புகள் உயரும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய்  - சுக ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சூர்யன் - களத்திர  ஸ்தானத்தில் புதன் - தொழில்  ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் தைரிய ஸ்தானத்திற்கும், கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும், மாறுகிறார்.


பலன்:
இன்று வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.  மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி நீடிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும்.

Trending News

Latest News

You May Like