1. Home
  2. தமிழ்நாடு

மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைப்பு..!

மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைப்பு..!

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை, அவருடைய தாயார் செல்வி சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாணை நடத்தி வரும் நிலையில் மாணவியின் செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.


இந்த நிலையில், ஐகோர்ட் உத்தரவின் படி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை ஒப்படைப்பதற்காக விழுப்புரம் கோர்ட்டுக்கு அவரது தாய் செல்வி இன்று வந்தார். அப்போது, செல்போனை தாம் பெற்றுக் கொள்ள முடியாது. சிபிசிஐடி விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்குமாறும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து செல்வி, தனது மகள் ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடி விசாரணை அலுவலரிடம் ஒப்படைக்கச் சென்றார். பின்னர், விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஸ்ரீமதியின் செல்போனை ஒப்படைத்தார்.

Trending News

Latest News

You May Like