விவசாயிகளே, நாளைக்குள் இதை செய்துடுங்க: இல்லன்னா, உதவித்தொகை கிடைக்காது..!

விவசாயிகளே, நாளைக்குள் இதை செய்துடுங்க: இல்லன்னா, உதவித்தொகை கிடைக்காது..!
X

மத்திய அரசின் உதவித்தொகை பெறும் விவசாயிகள், தங்களின் அடுத்த தவணையை தொடர்ந்து பெறுவதற்கு நாளைக்குள் தங்கள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மதுரை கோட்ட தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், தங்களின் அடுத்த தவணையை தொடர்ந்து பெறுவதற்கு நாளைக்குள் (டிச. 15-ம் தேதி) ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.


அதாவது, https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவோ, செல்போன் செயலி மூலமாகவோ தங்களது செல்போன் எண்னுக்கு வரும் ஒருமுறை அங்கீகாரக்குறியீட்டை (ஓ.டி.பி.) பயன்படுத்தி, சுய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விவசாயிகள் தங்களின் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

எனவே, விவசாயிகள் அருகில் உள்ள தபால்நிலையங்கள், தபால்காரர், கிராம தபால் ஊழியரை தொடர்பு கொண்டு, தங்களது ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். தபால்காரர் மற்றும் கிராம தபால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செல்போன் மற்றும் பயோமெட்ரிக் கருவி மூலம் விவசாயிகளுக்கு ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைத்து தரப்படும். இதற்காக 50 ரூபாய் மட்டும் கட்டணமாக செலுத்த வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it