திருமணத்திற்கு முதல்நாள் இரவு வரதட்சணை கொடுமை… மணப்பெண் தற்கொலை!!

திருமணத்திற்கு முதல்நாள் இரவு வரதட்சணை கொடுமை… மணப்பெண் தற்கொலை!!
X

தெலுங்கானா மாநிலம் நவிபேட்டை பகுதியைச் சேர்ந்த ரவளி (22) என்ற பெண்ணுக்கும், சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் மெகந்தி விழாவில் மணமகளும், மணமகனும் சந்தோஷமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் மறுநாள் காலை மணப்பெண் அறை கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் திறக்காத நிலையில் கதவை உடைத்து பார்த்த போது ரவளி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், ரவளி இரவில் வெகுநேரம் மணமகனிடம் போனில் பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையில் சந்தோஷ் வரதட்சணை கொடுமை செய்தது தெரியவந்தது.ரவளி திருமணத்திற்கு பிறகு நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு கிடைக்கும் பணத்தை தன்னிடம் தான் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதோடு திருமணம் முடிந்த கையோடு சொத்துகளை பிரித்துவிட வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார்.

அனைத்து விருந்தாளிகளும் வந்த பிறகு திருமணம் நின்று விட்டால், பெற்றோருக்கு அவமானம் ஏற்படும் என்று எண்ணிய ரவளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரவளியின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் மணமகன் சந்தோஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it