அரசு மருத்துவமனையில் இலவச கருக்கலைப்பு.. அதிர்ச்சியில் மக்கள்..!

அன்னூர் அரசு மருத்துவமனையின் முகப்பு பகுதியில், 'இங்கு இலவசமாக கருக்கலைப்பு செய்யப்படும்; ரகசியம் பாதுகாக்கப்படும்' என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி உரிய காரணங்கள் இருந்தால் கருக்கலைப்பு செய்யப்படும். இதே போல திருமணத்திற்கு முன்பு சூழ்நிலை காரணமாக கருவுற்ற பெண்களுக்கு அவரது பெற்றோர் உறுதிமொழியின் படி சட்டப் பூர்வமாக கருக்கலைப்பு செய்யப்படுகின்றன.
உயிருக்கு ஆபத்தான இந்த சிகிச்சையை சிலர் சட்டவிரோதமாக செய்வதால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தல் குற்றமாகும். சட்டவிரோத கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டம் அன்னூர் அரசு மருத்துவமனை முகப்பு பகுதியில், 'இங்கு இலவசமாக கருக்கலைப்பு செய்யப்படும்; அது குறித்து ரகசியம் காக்கப்படும்' என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது, மருத்துவமனைக்கு வரும் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.