குழந்தைகளை தொட்டிலில் தூங்க வைப்பது ஏன்..?

குழந்தைகளை தொட்டிலில் தூங்க வைப்பது ஏன்..?
 | 

குழந்தைகளை தொட்டிலில் தூங்க வைப்பது ஏன்..?

அந்த காலத்து மக்களுக்கு விவசாயம் தான் முக்கிய வேலையாக இருந்தது. அதிலும், விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. அந்த மாதிரி, வயல் வேலைக்கு தன் கைக்குழந்தையோடு செல்லும் பெண்களால் உருவாக்கப்பட்டது தான் தொட்டில். வயல் ஓரமா, நிழலா இருக்க மரத்துல, தன்னோட சேலையில தொட்டில் கட்டி குழந்தையை "ஆரிரோ" பாடி தூங்க வச்சிட்டு போயிடுவாங்க. குழந்தையும் குளு, குளு காற்றுல... காக்கா, குருவி பாடுற பாட்ட கேட்டுட்டு.. ஜாலியா தூங்கும்.. ஆனா, இதுக்கு பின்னாடி ஒரு மிகப் பெரிய அறிவியல் உண்மை இருக்கு... நாம பாரம்பரியமா பயன்படுத்திட்டு வர தொட்டிலுக்கும், தாயின் கருவறைக்கும் நெறைய தொடர்பு இருக்கிறதா மருத்துவர்கள் சொல்றாங்க. குழந்தை தாயின் கருவறையில் இருக்கும் போது, பனிக்குட நீரில் நீந்திப் பழகிய அந்த செல்ல மீன்குட்டி , அம்மா நடக்கும் போதும், உடல் அசைவின் போதும் ஊஞ்சலாட்டத்தை கருவறையில் உணருமாம். அந்த இருட்டும், கதகதப்பும் அதற்கு பாதுகாப்பு உணர்வைத் தருமாம். அது மாதிரியே, தொட்டில் அசையும் போதும், குழந்தை தன் தாயின் கருவறை அசைவுகளை உணர்ந்து நிம்மதியா தூங்குமாம். இடையில, லைட்டா முழிச்சுக்கிட்டாலும், அதிக வெளிச்சம் தொட்டிலுக்குள்ள இல்லாததால, மம்மிய டிஸ்டர்ப் பண்ணாம திரும்பவும் "கியூட்டா" தூங்கிடுமாம். அதனால, குழந்தைங்கள தொட்டில் கட்டி தூங்க வைங்க - னு மருத்துவர்கள் சொல்றாங்க.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP