வரமாய் கிடைத்த மகனின் இழப்பு.. துயரத்திலும் பலருக்கு உதவி செய்யும் தம்பதி..

கேரளா மாநிலம், கொச்சியை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் குழந்தை வேண்டி பல கோயில்கள் ஏறி இறங்கி பிரார்த்தனை செய்து, மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்தும் பலனில்லாமல் இருந்துள்ளது.
 | 

வரமாய் கிடைத்த மகனின் இழப்பு.. துயரத்திலும் பலருக்கு உதவி செய்யும் தம்பதி..

கேரளா மாநிலம், கொச்சியை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் குழந்தை வேண்டி பல கோயில்கள் ஏறி இறங்கி பிரார்த்தனை செய்து, மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்தும் பலனில்லாமல் இருந்துள்ளது. இதனால் நம்பிக்கையை இழந்த தம்பதியினருக்கு திடீரென 7 வருடங்களுக்கு பிறகு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இதனால் மகிழ்ச்சியடைந்த அந்த தம்பதியினர் குழந்தையை மிக பத்திரமாக வளர்த்து வந்துள்ளனர். ஆனால் குழந்தைக்கு 7வயது இருக்கும் போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு குழந்தை இறந்துள்ளான். இதனால், மனமுடைந்து துயரமுற்ற தம்பதியினர். மகனின் பிறந்தநாள் தினத்தில் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்வதை வழக்காமாக கொண்டனர். 

வரமாய் கிடைத்த மகனின் இழப்பு.. துயரத்திலும் பலருக்கு உதவி செய்யும் தம்பதி..

அந்தவகையில், சமீபத்தில் அவர்கள் மகனின் 20வது பிறந்த நாளையொட்டி, 2000 பேருக்கு உணவு வழங்கியதோடு, 7 ஏழை இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். தங்களது துயரத்திலும் கூட மகனின் பிறந்தநாளில் மகிழ்ச்சியை வெளிபடுத்தும் விதமாக இது போன்ற நல்ல காரியங்களில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP