1. Home
  2. தமிழ்நாடு

தேள் கடியிலிருந்து காப்பாற்றிய சாய்பாபா

தேள் கடியிலிருந்து காப்பாற்றிய சாய்பாபா

நாசிக்கைச் சேர்ந்த நாராயணன் மோதிராம் ஜனி என்பவர் சாய்பாபாவின் ஒரு அடியவர். இவர் ராமசந்திர வாமன் மோடக் என்ற சாய்பாபாவின் மற்றுமொரு அடியவரின் கீழ் வேலை பார்த்து வந்தார். ஒருமுறை அவர் தமது தாயாருடன் சென்று சாய்பாபாவைப் பார்த்தார். அப்போது, சாய்பாபாவே அவளிடம் அவர் (அவரது மகன்) இனிமேல் வேலை செய்யக் கூடாது என்றும் சுய வியாபாரம் ஆரம்பிக்க வேண்டுமென்றும் கூறினார். சில நாட்களுக்குப் பின் இவ்வுரை உண்மையானது. நாராயணன் ஜனி வேலையை விட்டு விட்டு "ஆனந்தாச்ரம்" என்ற ஒரு தங்கும் விடுதியை ஆரம்பித்தார். அது செழிப்பாக வளர்ந்தது. ஒருமுறை இந்த நாராயணன் ஜனியின் நண்பர் ஒருவரைத் தேள் கடித்தது. அதனால், ஏற்பட்ட வலி தீவிரமானது . தாங்கிக் கொள்ள முடியாதது. அத்தகைய சந்தர்ப்பங்களில் உதி மகிவும் பலனுள்ளது. வலிக்கும் இடத்தில் அது தடவப்பட வேண்டும். எனவே நாராயணன் அதைத் தேடினார்.


ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர் சாய்பாபாவின் படத்தின் முன்நின்று சாய்பாபாவின் உதவியை வேண்டி அவர் நாமத்தை ஜெபித்து சாய்பாபாவின் படத்தின் முன்னால் புகைத்து கொண்டிருக்கும் ஊதுபத்தியின் சாம்பலிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்து அதை சாய்பாபாவின் உதியாக நினைத்துக் கொண்டு வலிக்கும் இடத்திலும் கடிவாயிலும் அதைத் தடவினார். அவர் விரலை எடுத்த உடனேயே வலி மறைந்து விட்டது. இருவருமே உணர்ச்சி வசப்பட்டுப் பெருமகிழ்ச்சியுற்றனர்.


டாக்டர். வி. ராமசுந்தரம்

newstm.in

Trending News

Latest News

You May Like