பிரபல ரவுடி வெட்டி படுகொலை.. பழிக்கு பழியாக கொலை..?

பிரபல ரவுடி வெட்டி படுகொலை.. பழிக்கு பழியாக கொலை..?
 | 

பிரபல ரவுடி வெட்டி படுகொலை.. பழிக்கு பழியாக கொலை..?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நொண்டி தனபால் என்கிற தனபால் (36). ரவுடியான இவர் மீது 2018 ஆம் ஆண்டு சூரியம் பாளையத்தை் சேர்ந்த குப்பன் என்ற நிதிநிறுவன அதிபரை கத்தியால் கொலை செய்த வழக்கு உள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான இவர் ஜாமீனில் வந்துள்ளார். ஏற்கனவே திருச்செங்கோட்டில் பிரபல ரவுடி வளத்தி மோகன் கொலை வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டவர். திருமணமானாலும் இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். ஆனங்கூர் ரோட்டில் உள்ள இறைச்சிக் கடைக்கு தனது நண்பருடன் வந்த இவர் கடையின் பின் பக்கத்தில் உடன் வந்தவர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.

பிரபல ரவுடி வெட்டி படுகொலை.. பழிக்கு பழியாக கொலை..?

திடீரென அலறல் சத்தம் கேட்டதை அடுத்து கறிக்கடைககாரர் பாலன் மற்றும் சிலர் சென்று பார்த்த போது வெட்டுகாயங்களுடன் தனபால் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். தனபாலுடன் வந்தவர்களும் மாயமாகி இருந்தனர். இதனைக் கண்ட கறிக்கடைக்காரர் பாலனும் கடையை மூடிவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. கிளாக்காடு பகுதி பள்ளிப்பாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வந்த பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்தக் கொலைக்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP