1. Home
  2. தமிழ்நாடு

தமிழக காவல் துறையினருக்கு குடியரசு தலைவர் விருது..! - விவரம் இதோ..

தமிழக காவல் துறையினருக்கு குடியரசு தலைவர் விருது..! - விவரம் இதோ..

குடியரசுத் தலைவர் விருதுக்கு தமிழக காவல் துறை அதிகாரிகள் 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டும் குடியரசுத் தலைவர் விருது பெற தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ள 24 பேர் கொண்ட காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ், திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி பெத்துவிஜயன் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.

இதுதவிர குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான விருதுகளுக்கு 21 பேர் தேர்வாகியுள்ளனர். அதில், சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பி சி.ராஜேஸ்வரி, சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையர் மயில் வாகனன், புனித தோமையார் மலை ஆயுதப்படை துணை ஆணையர் ர.ரவிச்சந்திரன், சென்னை ஆயுதப்படை துணை ஆணையர் கி.சவுந்திரராஜன், சென்னை குற்றப்புலனாய்வுத் துறை டிஎஸ்பி ச.வசந்தன், நாகர்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஎஸ்பி கோ.மதியழகன், திருநெல்வேலி குற்றப்புலனாய் வுத்துறை டிஎஸ்பி வே.அனில் குமார், திருப்பூர் மாநகர காவல் உதவி ஆணையர் கா.சுந்தரராஜ், சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஎஸ்பி சே.ராமதாஸ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

மேலும், கோவை குடிமைப் பொருள் டிஎஸ்பி ந.ரவிக்குமார், சென்னை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஷே.அன்வர் பாட்சா, நாகப்பட்டினம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சென்னை பாதுகாப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ம.நந்தகுமார், ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை காவல் ஆய்வாளர் மு.நடராஜன், தூத்துக்குடி குடிமைப்பொருள் காவல் ஆய்வாளர் ந.திருப்பதி, சென்னை தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அ.மணிவேலு ஆகியோரும் குடியரசு தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர, சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ந.ஜெயசந்திரன், த.டேவிட், ஜே.பி.சிவக்குமார், ஒய்.சந்திரசேகரன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள் 3 பேருக்கும், பாராட்டத்தக்கப் பணிக்காக 21 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

newstm.in

Trending News

Latest News

You May Like