ரஜினிக்கு என் கையால சமைச்சுப் போடணும்?! பிரபல நடிகையின் வினோத ஆசை!

நான் தான் உங்களுக்கு சமைச்சுப் போடுவேன்.. ஓகேவா ? ரஜினியிடம் கேட்ட நடிகை! ரஜினியின் ரியாக்ஷன் என்ன?
 | 

ரஜினிக்கு என் கையால சமைச்சுப் போடணும்?! பிரபல நடிகையின் வினோத ஆசை!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடந்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் மனம் திறந்து பேசினார்கள்.  இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இந்த படத்தில், ரஜினிகாந்த் ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் காவலராக நடித்துள்ளார். 

இந்நிலையில் இன்று மாலை நடைப்பெற்ற தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் ரஜினியிடம், உங்கள் வீட்டிற்கு வந்தால் நான்தான் சமைப்பேன் ஓகேவா என நடிகை நிவேதா தாமஸ் கேட்டதற்கு ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

ரஜினிக்கு என் கையால சமைச்சுப் போடணும்?! பிரபல நடிகையின் வினோத ஆசை!

இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் ஒளிபரப்பப்பட்ட ஸ்பெஷல் வீடியோவில், ரஜினி நடித்திருக்கும் படங்களில் இருந்து பிரபலமான பஞ்ச் டயலாக்குகள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டன. இதனை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் ரஜினியுடனான நட்பு குறித்து பேசினார்கள். தர்பார் படத்தில் நடித்துள்ள நிவேதா தாமஸும் பேசினார். அப்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருப்பதாக கூறினார். மேலும் இந்தப்படத்தில் நடிப்பேன் என நான் கனவில் கூட நினைக்கவில்லை. ஒரு காட்சியில் கூட ரஜினி சார் முகம் சுளிக்கவில்லை. அவ்வளவு எனர்ஜி அவருக்கு என்றவர், ரஜினியைப் பார்த்து "சார் நீங்கள் ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு என்னை அழைத்துள்ளீர்கள், நான் உங்கள் வீட்டிற்கு வந்தால் நான்தான் உங்களுக்கு சமைச்சு போடுவேன் ஓகே வா" என்று கேட்டார். தம்ப்ஸ் அப் அதற்கு ரஜினிகாந்த் சிரித்துக் கொண்டே தம்ப்ஸ்அப் செய்து ஓகே என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP