நடுரோட்டில் ரஜினிகாந்த் உருவ பொம்மை எரிப்பு: திடீர் பரபரப்பு

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு எதிராக அவரது உருவ பொம்மையை எரித்து ஆதித் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
 | 

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், கைகளில் முரசொலி வைத்திருந்தால் அவன் திமுக காரன் என்றும், துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி என்றும் பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் செருப்பு மாலை போடப்பட்டது என்றும் பேசினார். ரஜினியின் இந்த பேச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில்,மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே நடிகர் ரஜினிகாந்த் உருவ பொம்மையை எரித்து ஆதித் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ரஜினியின் உருவ பொம்மையை எரித்த ஆதித் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP