1. Home
  2. தமிழ்நாடு

ரஜினியை எதிர்த்து போராடினால் 1 லட்சம் ரூபாய்! வெளியான திடுக்கிடும் தகவல்!

ரஜினியை எதிர்த்து போராடினால் 1 லட்சம் ரூபாய்! வெளியான திடுக்கிடும் தகவல்!

துக்ளக் விழாவில் ரஜினி பேசிய பேச்சு, தமிழக அரசியலில் காலம் கடந்தும் நிற்கும் போல. லெட்டர் பேட் கட்சிகளில் துவங்கி திராவிட கழகங்களின் ஆணி வேரையே அசைத்துப் பார்த்திருக்கிறது பெரியார் குறித்தும், இந்து கடவுள்கள் குறித்தும் ரஜினி பேசியது.
ரஜினியின் பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திருமா உட்பட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினிக்கு எதிராக திராவிட கழகங்களின் பெயர்களில் உள்ள லெட்டர் பேட் கட்சிகள், ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தப் போவதாகவும், நீதிமன்றத்தில் ரஜினியின் பேச்சு குறித்து வழக்கு தொடுத்தும் வருகின்றன.

இந்நிலையில், தான் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இந்நிலையில் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு இருப்பதாக ஒரு செய்தியை வார இதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

வரும் சட்டசபைத் தேர்தலில் கட்சி ஆரம்பித்து, களம் காணும் முடிவில் உறுதியாக இருக்கிறார் ரஜினி என்கிறது போயஸ் கார்டன் வட்டாரம். இந்நிலையில், ரஜினியை இப்படி அப்செட் செய்தால், அவரது அரசியல் எண்ட்ரி சைலண்டாகிவிடும் என்று கணக்குப் போட்டு, ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பணத்தை இப்போதே தண்ணீர் மாதிரி இறைக்கத் துவங்கியிருக்கிறார்கள். இது குறித்து எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். பதிலுக்கு அவர்களின் வீடுகளை நாங்கள் முற்றுகையிட துவங்கினால் தாங்கமாட்டார்கள் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.'


இந்த ஒரு லட்சம் ரூபாய் டீலிங்கிற்கு பின்னணியில் முன்னாள் அமைச்சர் ஒருவரும், வேகமாக வளர்ந்து வரும் வாரிசு அரசியல்வாதியும் இருப்பதாக சொல்கிறார்கள். ரஜினியை எதிர்ப்பவர்கள் எல்லாம் பத்திரிக்கைகளால் பரபரப்பாக கவனிக்கப்படுகிறார்கள் என்பதால், தொடர்ந்து ரஜினியை எதிர்க்கும் முடிவில் இருக்கிறாராம் அந்த வாரிசு அரசியல்வாதி.

newstm.in

Trending News

Latest News

You May Like