மன்னிப்பு கேட்க முடியாது.. பெரியார் பற்றிய கருத்துக்கு ஆதாரத்துடன் வெளியே வந்த ரஜினி..

மன்னிப்பு கேட்க முடியாது.. பெரியார் பற்றிய கருத்துக்கு ஆதாரத்துடன் வெளியே வந்த ரஜினி..
 | 

மன்னிப்பு கேட்க முடியாது.. பெரியார் பற்றிய கருத்துக்கு ஆதாரத்துடன் வெளியே வந்த ரஜினி..

சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை முன்வைத்தார். ரஜினி சொன்னது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை, அவர் வரலாற்றைத் திரித்து சொல்கிறார் என்றும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று அது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் போயஸ் தோட்டம்  தனது இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் கேள்விப்பட்டது, பத்திரிகைகளில் வந்ததைத் தான் நான் பேசினேன். கற்பனையாக எதுவும் கூறவில்லை. நான் அப்படி எதுவும் பேசவில்லை.

மன்னிப்பு கேட்க முடியாது.. பெரியார் பற்றிய கருத்துக்கு ஆதாரத்துடன் வெளியே வந்த ரஜினி..

இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார். 

தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர், “நீங்கள் ஒரு பத்திரிகையை நீட்டி, சொன்னது உண்மைதான் என்று சொன்னாலும், அன்று களத்தில் இருந்தவர்கள் நீங்கள் சொன்னது பொய் என்பதற்கு ஆதாரமாக பல சான்றுகளை வெளியிட்டுள்ளார்களே?” என்றார். அதற்கு ரஜினி, “அவர்கள், அவர்களுடைய சான்றை வெளியிடுகிறார்கள். நான் என் தரப்பு சான்றுகளை வெளியிடுகிறேன். இது மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம்,” என்று பேசி முடித்து சரசரவென வீட்டுக்குள் சென்றுவிட்டார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP