ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு! விளாசும் பிரபல நடிகை!!

"ஒரே நாளில் ஒரே கட்சிக்காரர்கள் ஆளுக்கொரு விதமாக பேசினால் பாவம் மக்கள் எதை எடுத்துக்கறது..? எங்காவது சொகுசு ரிஸார்ட்டில்கூடி ஒரு முடிவு எடுத்து வரலாமில்லையா..? அவர்களின் சொந்த மீடியாவே குழம்புகிறார்கள்.
 | 

ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு! விளாசும் பிரபல நடிகை!!

"ரஜினி அரசியலுக்கு வந்து விட்டால் அதிமுகவை, பிஜேபி இரண்டாம் பட்சமாக நடத்தும் என்று அதிமுகவுக்கு சந்தேகமா?" என்று கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

துக்ளக் விழாவில், பெரியார் குறித்து சர்ச்சையாக ரஜினி பேசியது கடந்த ஒருவாரமாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வலுத்து வருகின்றன. திரைத்துறையில் உள்ள சிலர் ரஜினிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகை குஷ்பு, ஷோபனா ரவி, இயக்குனர் பேரரசு, ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், ரஜினியின் கருத்துக்கு அதிமுகவும் திமுகவும் வெளிப்படுத்திய எதிர்ப்பை ஒப்பிட்டு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அதிமுகவில் உள்ள அமைச்சர்களே இருவேறுவிதமாக கருத்து தெரிவித்துள்ளனர். 

ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு! விளாசும் பிரபல நடிகை!!

இந்நிலையில் நடிகை கஸ்தூரி, "ஒரே நாளில் ஒரே கட்சிக்காரர்கள் ஆளுக்கொரு விதமாக பேசினால் பாவம் மக்கள் எதை எடுத்துக்கறது? எங்காவது சொகுசு ரிசார்ட்டில் கூடி ஒரு முடிவு எடுத்து வரலாமில்லையா? அவர்களின் சொந்த மீடியாவே குழம்புகிறார்கள். இதில், ஆச்சர்யம் என்னவென்றால், பெரியாரை விமர்சித்த ரஜினியை திமுகக்காரர்கள் தாக்காமல் நாசூக்காக கருத்து சொல்கிறார்கள்.

ஜெயக்குமார், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் தான் அதிகமாக எதிர்க்கிறார்கள். அதிலும் அமைச்சர் செல்லூர் ராஜு, சௌந்தர்யாவையும் அவரது கணவர் விசாகனையும் பற்றி பேச அவசியம் என்ன? கடந்த எத்தனையோ வருடங்களாக அதிமுகவை யாரும் பெரியாருடன் இணைத்து பார்த்ததில்லை. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையும் கொள்கைகளும் பெரியாரிய அரசியலும் எதிர்எதிர் துருவங்கள்.

ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு! விளாசும் பிரபல நடிகை!!

மேலாக, பிஜேபியும் அதிமுகவும் தோழமை கட்சிகள் எனும் போது அம்மா வழி வந்த அமைச்சர்கள், இன்று இப்படி பேசுவதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? ஒருவேளை ரஜினி வந்து விட்டால் அதிமுகவை பிஜேபி இரண்டாம் பட்சமாக நடத்தும் என்ற சந்தேகமோ?" என்று கூறியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP