1. Home
  2. தமிழ்நாடு

வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை! வெளியான பகீர் தகவல்!

வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை! வெளியான பகீர் தகவல்!

மகாராஷ்ட்ரா மற்றும் மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு அபரிமிதமான வெங்காய விளைச்சலால் போதிய விலையின்றி வெங்காயத்தை சாலையில் கொட்டி அழிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் வெங்காயம் பயிரிடுவதை கைவிட்டனர். அதோடு, கனமழை காரணமாக வெங்காய பயிர்கள் அழிந்தன.

இதனால் இந்தியா முழுவதும்வெங்காயத்தின் விலை உச்சகட்டத்தில் இருந்தது. இதனை அடுத்து வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதனால், வெங்காயத்தின் விலை ரூபாய் 300 வரை உயரும் வாய்ப்பு இருந்ததால் வெங்காயத்தை ஒரு சில வியாபாரிகள் பதுக்கி வைத்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே ரூபாய் 200க்கும் மேல் வெங்காயத்தின் விலை ஏறியது. பின்னர் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தினால், விலை சற்று குறைந்தது.

இந்த நிலையில் பேராசை காரணமாக அதிக அளவில் பதுக்கி வைத்த வெங்காயம் தற்போது முளை விட்டு பயன்படுத்த முடியாத நிலைக்கு போய்விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பேராசையால் பெரு நஷ்டம் ஆகி தற்போது அந்த வெங்காயத்தை விற்க முடியாமல் கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெங்காயத்தை பதுக்காமல் சரியான விலையில் விற்பனை செய்து இருந்தால் வியாபாரிக்கும் லாபம் கிடைத்திருக்கும் மக்களும் பலன் அடைந்திருப்பார்கள். ஆனால் தற்போது பெரும் லாபம் சம்பாதிக்க நினைத்த வியாபாரிகள் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like