சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை! ரஜினியின் திடீர் முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை! ரஜினியின் திடீர் முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!
 | 

சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை! ரஜினியின் திடீர் முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் ஆளுமைகளின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுவதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது, தமிழ் சினிமா நடிகர்கள், பொதுமக்கள் என்று அனைவரிடமும் கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் சமயத்தில், தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தனது இலக்கு சட்ட சபைத் தேர்தல் தான் என்றும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை! ரஜினியின் திடீர் முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

பல வருடங்களாக தீவிர அரசியலுக்கு  ரஜினி வருவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்கிற அறிவிப்பே பெரும் ஆனந்தமாக இருந்தது. சட்டசபைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும், அரசியல் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட போவதாகவும் ரஜினி அறிவித்திருந்தார். 

அதன் பின்னர், ரஜினி மக்கள் மன்றம் சுறுசுறுப்படைய துவங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் கூட தற்போது ரஜினி மக்கள் மன்றம் இயங்கி வரும் அளவிற்கு பரந்து விரிந்தது. எப்போது தேர்தல் அறிவித்தாலும் சந்திக்கத் தயார் என்றும் ரஜினி கூறியிருந்தார். அந்தளவிற்கு ரஜினி மக்கள் மன்றம் தயாராக தமிழகத்தில் கிளைப் பரப்பி உள்ளது. தமிழகம் முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் கூட முடிவு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. 

சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை! ரஜினியின் திடீர் முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில், திடீர் திருப்பமாக 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தின்  வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ரஜினி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. 

சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை! ரஜினியின் திடீர் முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

முன்னதாக, கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் என்று தனிக்கட்சி ஆரம்பித்து, யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட வேட்பாளர்களை களமிறக்கியிருந்தாலும் ரஜினியின் நண்பரான நடிகர் கமல் போட்டியிடவில்லை. அதே போல், ரஜினியும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில், ரஜினியின் மக்கள் மன்றம் போட்டியிட்டாலும், ரஜினிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு இல்லை என்ற அதிர்ச்சி ரஜினி ரசிகர்களிடையே சோர்வையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. ரஜினியின் மனசை ரஜினியைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது போல!?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP