தடுமாறி கீழே விழுந்தார் மோடி! பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்!

படிக்கட்டில் ஏறும் போது, தடுமாறி கீழே விழுந்தார் பிரதமர் மோடி! பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்!
 | 

தடுமாறி கீழே விழுந்தார் மோடி! பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்!

இந்திய பிரதமர் மோடி உத்திரபிரதேசத்தில் நடைப்பெற்ற கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக உத்திரபிரதேசம் சென்றிருந்தார். இந்த கூட்டத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், கங்கை நதியை தூய்மைபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட நமாமி கங்கா திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

கூட்டம்  முடிந்த பின்னர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கங்கை நதியில் படகில் பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு, படகில் திரும்பிய பிரதமர் மோடி, படியில் கரையேறும் போது கால் தடுக்கி கீழே விழ முயன்றார். அவருடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக பிரதமருக்கு உதவி செய்தனர். இதனால், அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP