1. Home
  2. தமிழ்நாடு

காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லையா..? சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை..

காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லையா..? சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை..

கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக - கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பணியாற்றி வந்தார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன். வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த காவலர் வில்சன் நிலைக்குலைந்து கிழே விழுந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு சென்று பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து ரோந்து பணியில் இருந்த சக காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த காவலர் வில்சனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வில்சன் உயிரிழந்தார்.

வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் முகத்தை மறைத்தபடி வந்த இளைஞர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மூ வடநேரே நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ நேரத்தில் அந்த பகுதியில் இருந்த நபர் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சிறப்பு உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்டது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்ற கோணங்களில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற சம்பவம் காவல்துறையினர் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

newstm.in

Trending News

Latest News

You May Like