1. Home
  2. தமிழ்நாடு

ஆன்லைனில் ஃபாஸ்ட் டேக் (FASTAG) பெறும் வழிமுறைகள்! உஷார்! இன்றே கடைசி நாள்!

ஆன்லைனில் ஃபாஸ்ட் டேக் (FASTAG) பெறும் வழிமுறைகள்! உஷார்! இன்றே கடைசி நாள்!

சுங்கச்சாவடிகளிலை கடக்கும் போது சில தடங்களில் ஃபாஸ்ட் டேக் என்ற எழுதியிருப்பதை பார்த்திருப்போம். அந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள், சுங்கச்சாவடிகளில் நிற்காமல் செல்வதையும் பார்த்திருப்பீர்கள். பிற லேன்களில் செல்லும் வாகனங்கள், சுங்கச்சாவடிகளில் நின்று கட்டணம் செலுத்திய பிறகே பயணிக்கும்.

ஃபாஸ்ட் டேக் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் மட்டும் ஏன் நிற்காமல் செல்கிறது என்ற கேள்வி மனதில் எழலாம்.
ஃபாஸ்ட் டேக் என்றால் என்ன? ஃபாஸ்ட் டேக் என்பது ஒரு கார்ட் ஆகும். இந்த கார்ட்டை முன்னதாகவே பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த கார்ட்டை ஸ்டிக்கர் போல் உங்கள் வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டிக் கொள்ளலாம். ஃபாஸ்ட் டேக் வழித்தடத்தில் தடுப்புக் கம்பிக்கு மேல் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்கேனர் கருவி, இந்த வழித்தடத்தில் உங்கள் வாகனம் செல்லும் போது, வாகனத்தின் கண்ணாடியில் உள்ள ஸ்டிக்கரை உடனடியாக ஸ்கேன் செய்யும்.

அப்படி உங்கள் வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்த சில விநாடிகளிலேயே மொத்தமாக செலுத்திய பணத்தில் இருந்து. அந்த சுங்கச்சாவடிக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட் செய்து கொள்ளும். அதன் பின்னர் தடுப்புக் கம்பி தானாக திறந்து, உங்கள் வாகனத்திற்கு வழி விடும். இது அனைத்தும் வழக்கம் போல் தொழில்நுட்ப முறையில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும்.

சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் சோதனை அடிப்படையில் ஃபாஸ்ட் டேக் டிஜிட்டல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஃபாஸ்ட் டேக் வசதியானது RFID என்ற தொழில்நுட்பத்தில் மூலம் இயங்குகிறது. சுங்கச்சாவடிக்கு அருகே 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும் போது ரேடியோ அதிர்வு எண் தொழில் நுட்ப சாதனங்கள் மூலம் ஃகாரில் ஒட்டியுள்ள ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து விடும்.

நாளை வரை ஃபாஸ்ட் டேக் பெறுவதற்கு காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நாளைக்குள் ஃபாஸ்ட் டேக் பெறாமல், அதன் பின்னர் சுங்கச்சாவடிகளில் பயணித்தால் நீங்கள் பணம் செலுத்தி தான் சுங்கச்சாவடியைக் கடக்க வேண்டும். மேலும், இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீங்கள் ஃபாஸ்ட் டேக் கார்ட்டை நேரடியாக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். சில வங்கிகள் மூலம் ஃபாஸ்ட் கட்டணம் செலுத்தி ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கரூர் வைசியா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஃபெடரல் பேங்க், சரஸ்வத் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், ஐடிஎஃப்சி வங்கி, எக்யூடாஸ் வங்கி, பே டீம் பணம் செலுத்தும் வங்கி, அமேசான் இந்தியா இணையதளம் ஆகியவைகளிலும் கட்டணம் செலுத்தி ஃபாஸ்ட் டேக் கார்ட் பெறலாம்.

அனைத்து வங்கிகளிலும் பணம் செலுத்துவதற்கு முன்பாக கேஒய்சி படிவம் நிரப்ப வேண்டும். அதன்பின் வாகனத்தில் ஆர்.சி புக், ஓட்டுநரின் இருப்பிட சான்றிதழ், அடையாள சான்றிதழ், ஓட்டுநரின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் ஃபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியன முறையாக சமர்பித்த பிறகே ஃபாஸ்ட் டேக் கார்ட்டை பெற முடியும்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like