டியூசன் டீச்சரின் கணவர் செஞ்ச வேலை! மாணவியின் புகாரால் கைதான தம்பதிகள்!

டியூசனுக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியை கணவருடன் கைது..
 | 

டியூசன் டீச்சரின் கணவர் செஞ்ச வேலை! மாணவியின் புகாரால் கைதான தம்பதிகள்!

சென்னை ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் நரேஷ். இவரது மனைவி விஜயலட்சுமி என்பவர் தனியார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாலை நேரங்களில் வீட்டில் டியூசன் வகுப்புகளும் நடத்தி வருகிறார். இந்நிலையில், டியூசன் படிக்க வந்த 6 வயது சிறுமியிடம் நரேஷ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்துள்ளனர்.

டியூசன் டீச்சரின் கணவர் செஞ்ச வேலை! மாணவியின் புகாரால் கைதான தம்பதிகள்!

அப்போது டியூசன் ஆசிரியையின் கணவர் பாலியல் தொல்லை அளித்த கொடூமையை சிறுமி பெற்றோரிடம் கூறினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது நரேஷும் அவரது மனைவி விஜயலட்சுமியும் தகராறு செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் நரேஷையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி விஜயலட்சுமியையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP