வீடியோ காலில் கண்முன்னே தீயில் எரிந்து பலியான கணவன்.. கண்ணீர் விட்டு கதறும் மனைவி..

சமீபத்தில் சூடான் நாட்டில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 23 பேர் பலியானதாகவும் அதில் இருவர் இந்தியர் எனவும் செய்திகள் வெளியாகின. அந்த தீவிபத்தில் உயிரிழந்த ஒருவர் கடலூர் மாவட்டம் பன்ருட்டி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்.
 | 

வீடியோ காலில் கண்முன்னே தீயில் எரிந்து பலியான கணவன்..  கண்ணீர் விட்டு கதறும் மனைவி..

சமீபத்தில் சூடான் நாட்டில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 23 பேர் பலியானதாகவும் அதில் இருவர் இந்தியர் எனவும் செய்திகள் வெளியாகின. அந்த தீவிபத்தில் உயிரிழந்த ஒருவர் கடலூர் மாவட்டம் பன்ருட்டி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர். இவருக்கு  கலை சுந்தரி என்ற மனைவியும், சிவானி என்ற மகளும் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக ராஜசேகர் சூடானில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். 

 தினமும் வேலை முடிந்தவுடன்  அவரது மனைவியிடம் விடியோ காலில் பேசுவதை வழக்கமாக கொண்ட ராஜசேகர். சம்பவம் நடந்த அன்று பணியில் இருக்கும் போதே வீடியோ காலில் அழைத்து பேசியுள்ளார். அப்போது, பொங்கலுக்கு வருவதாகவும், குழந்தைக்கு பெரிய கொலுசு வாங்கி தருவதாகவும் சொல்லி பேசிகொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அலறல் சத்தத்தோடே போனை கீழே போட்டுள்ளார். வீடியோவில் அந்த பகுதி முழுவதும் தீ பரவியது போன்று தெரிய  அலறல் சத்தத்துடனே கால் கட் ஆகியுள்ளது. இது குறித்து கலை சுந்தரி கண்ணீர் வடிய கதறி அழுதபடி கூறுயுள்ளார். இச்சம்பவம் கேட்போரின் நெஞ்சை பதபதைக்க வைக்கிறது.

Newstm.in 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP