தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது! அலைமோதும் மக்கள்!

சர்வதேச அளவிலான பொருளாதார பின்னடைவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது.
 | 

கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயையும் தாண்டியது. ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டிவிட்டது. செப்டம்பர் மாதம் ஒரு சவரன் தங்கம் 30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. 

தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது! அலைமோதும் மக்கள்!

இதை தொடர்ந்து தங்கத்தின் விலை கிடு கிடுவென குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர் சற்று ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையானது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6 குறைந்து ரூ.3,591க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.48 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.28,728க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வருவதால், தை மாதப் பிறப்பின் போது திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் நகைக்கடைகளில் குவிந்து வருகிறார்கள்.

வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.46.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.100 குறைந்து ரூ.46,500க்கும் விற்பனையாகி வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP