1. Home
  2. தமிழ்நாடு

திருவாதிரை தினத்தில் இதை மறக்காம செய்யுங்க!

திருவாதிரை தினத்தில் இதை மறக்காம செய்யுங்க!

நாளை திருவாதிரை ஆருத்ரா தரிசனம். திருவாதிரையன்று வழிபடும் பக்தர்கள் அனைவருமே திருவாதிரை களியை மறக்காமல் செய்து இறைவனுக்கு நிவேதனமாகப் படைப்பார்கள். திருவாதிரை களி எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?

தேவையானவை:

பச்சரிசி ரவை - 1 கப்
பயத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப்
தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி, திராட்சை, ஏலப்பொடி

செய்முறை:

பச்சரிசியை நன்றாக களைந்து, உலர்த்தி மிக்ஸியில் பொடியாக ரவையைப் போல அரைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவும். பின்னர் அரிசி ரவையையும் நன்கு வறுக்கவும். இப்போது, மிக்ஸியில் பருப்பு, அரிசியை ரவை போல் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, 2 டம்ளர் தண்ணீர் வைத்து வெல்லத்தை நன்றாக கரைத்துக் கொள்ளவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் வடிகட்டி, கொதிக்க ஆரம்பித்ததும், 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ரவைகளை போடவும்.

இப்பொழுது அடுப்பின் தீயை மெலிதாக்கி, கட்டி தட்டி விடாமல் நன்றாக கிளறி விடுங்கள். சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைத்து, நடுநடுவே கிளறி விடவும். ரவை நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கினார் திருவாதிரைக் களி ரெடி!

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like