5 1/2 வருஷங்களுக்குப் பிறகு கிரிக்கெட்! முதல் பந்திலேயே விளாசிய சச்சின்!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பலர் பாதிக்கப்பட்டனர். பல ஏக்கர் பரப்பிலான மரங்கள் தீயில் எரிந்த நிலையில், பல காட்டு விலங்குகளும் உயிரிழந்தன. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதித் திரட்டுவதற்கான கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்றது.
 | 

ரிக்கி பாண்டிங் தலைமையில் ஓர் அணியும், ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் மற்றொரு அணியும் தலா 10 ஓவர்கள் வரை விளையாடின. ரிக்கி பாண்டிங் அணிக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக இருந்தார்.

இந்நிலையில், காட்சி போட்டியில் சச்சின் விளையாடினால், அதிகமாக நிதித் திரட்ட முடியும் என்று ஆஸ்திரேலியாவின் பெண்கள் அணியைச் சேர்ந்த எல்லிஸி பெர்ரி சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட சச்சின் ஒரு ஓவர் விளையாடுவதாக ஒப்புக்கொண்டார்.

5 1/2 வருஷங்களுக்குப் பிறகு கிரிக்கெட்! முதல் பந்திலேயே விளாசிய சச்சின்!

அதன்படி மஞ்சள் நிற சீருடையுடன் சச்சின் மீண்டும் இன்று களம் இறங்கினார். மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்ப, தான் சந்தித்த முதல் பந்தை தனக்கே உரித்தான ஸ்டைலில் பவுண்டரிக்கு அனுப்பினார் சச்சின். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சச்சின், மைதானத்தில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் விளையாடிய வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP