1. Home
  2. தமிழ்நாடு

நாட்டின் வளர்ச்சிக்கு வரி செலுத்த முன் வாருங்கள்: பிரதமர் மோடி

நாட்டின் வளர்ச்சிக்கு வரி செலுத்த முன் வாருங்கள்: பிரதமர் மோடி

முறையாக அரசிடம் ஆண்டு வருமானக் கணக்கை காட்டாமல் இருக்கும் வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்கள், விரைவில் உச்சநீதிமன்றத்தை சந்தீப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்

தலைநகர் டெல்லியில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. அந்நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே சிறிது நேரம் உரையாடினார்.அப்போது அவர், வருமான வரி செலுத்துவதில் நேர்மையை கடைப்பிடிக்காதவர்கள் குறித்து கவலை தெரிவித்தார். தற்போதைய அரசு வரி விதிப்பு நடைமுறையில் பொதுமக்களை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் 1.5 கோடி மக்கள் மட்டுமே முறையாக வருமான வரி செலுத்தி வருகிறார்கள். மேலும் பலர் வருமான வரி செலுத்துவதை தவிர்க்க, வழிகளை கண்டறிந்து தங்களுடைய ஊதியத்தை பாதுகாத்து கொள்கின்றனர்.இதனால் நேர்மையாக வரி செலுத்துவோர் உட்பட அனைவரின் மீதும் கூடுதல் சுமை ஏறுகிறது. நாட்டின் நலனுக்காக நாட்டு மக்கள் அனைவரும் நேர்மையாக வரி செலுத்துவதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இந்தியாவைச் சேர்ந்தவர்களில் 3 கோடிக்கும் அதிகமானோர் வேலைவாய்பு மற்றும் ஓய்வுக்காக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவர்களில் 2,200 பேர் மட்டுமே ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் மேல் இருப்பதாக அரசிடம் கணக்கு காட்டியுள்ளனர். முறையாக கணக்கு காட்டாதவர்கள் விரைவில் உச்சநீதிமன்றத்தை சந்திப்பார்கள்.மக்கள் தங்களுடைய ஆடிப்படை தேவை முதல் ஆடம்பர தேவை வரை பூர்த்தி செய்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நேர்மையாக வரி செலுத்தும் எண்ணம் இல்லை எணும்போது கவலை அளிக்கிறது. தொழில்நுட்ப உதவியுடன் வரி ஊக்கத்தை உருவாக்கி வரும் இந்தியாவில், இதுபோன்ற மோசமான விளையாட்டுக்கு இடமில்லை.

நாட்டின் வளர்ச்சிக்கு வரி செலுத்த முன் வாருங்கள்: பிரதமர் மோடி

நாட்டின் வரி நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உலகளவில் வரி செலுத்தும் அதிகமான மக்கள் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. நேரத்தை வீணடிக்காமல், மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்டது போல 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை விரைவில் அடையும் இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் பேசினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like