1. Home
  2. தமிழ்நாடு

திருமண உதவி தொகைக்கு லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய பெண் அரசு அலுவலர்..

திருமண உதவி தொகைக்கு லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய பெண் அரசு அலுவலர்..

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக உதவி தொகை கேட்டு தலைவாசல் சமூக நலத்துறை அலுவலர் கீதா(54) என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார்.

கடந்த 1ஆம் தேதி மகளின் திருமணம் முடிவடைந்த நிலையில், வெங்கடேசன் சர்க்கரை நோய் காரணமாக மருத்துவமனையில் பெற்று வருவதால் அவரின் அக்காள் மகன் கார்த்திக்(28) என்பவரை திருமண உதவித்தொகை வாங்க அனுப்பு வைத்துள்ளார். இதையடுத்து நேற்று காலை கார்த்திக் தலைவாசல் சமூக நலத்துறை அலுவலரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, உங்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டுமானால் ரூ.3000 கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

லஞ்சமாக கேட்பதை சுதாரித்து கொண்ட கார்த்திக்கு இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் கூறியபடி நேற்று மாலை சமூக நலத்துறை அலுவலரிடம் கார்த்திக் ரூ.3000 ரொக்கத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சந்திரமௌலி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சமூக நல அலுவர் கீதாவை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தியதில் அவர் 3000 லஞ்சம் வாங்கியதாக ஒப்புக்கொண்டார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் அரசு அலுவலர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like