குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்!

வீட்டிற்கு வந்த ஒரு உறவுக்கார பெண்ணால் 17 வயது சிறுமியின் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்!

கேரள மாநிலம் கொல்லத்தையடுத்து குறிப்புழா பகுதியை சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் தனக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோரும் மகளை வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காலையில் கிளம்பி போகும் சிறுமி மாலை தான் வீட்டிற்கு வருவாள். ஆனால் கடந்த மாதம் 9ஆம் தேதி வேலைக்கு போவதாக கூறிவிட்டு சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை. 

இதனால் காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்த நிலையில், மறுநாள் காலையில் சொந்தக்கார பெண் ஒருவர், சிறுமியை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, திருவனந்தபுரம் பகுதியில் தவித்து கொண்டிருந்ததாகவும், அதை பார்த்து கூட்டிவந்ததாகவும் கூறி வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார். ஆனால் மகள் எதையோ பறிகொடுத்தவள் போலவே இருந்தாள். சிறுமியின் நடவடிக்கையில் நிறைய வித்தியாசம் தெரிந்தால், பயந்து போன பெற்றோர் மகளுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்துள்ளனர். 

இந்நிலையில், கவுன்சிலிங்கில் அந்த பெண் கூறிய தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுமி ஒரு நாள் வீட்டில் குளித்து கொண்டிருந்தபோது, வீட்டிற்கு வந்த சொந்தக்கார பெண் ஒருவர் அவர் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோவை சிறுமிக்கு போட்டு காட்டி,  தான் கூறியபடி செய்ய வேண்டும் இல்லையெனில், வீடியோவை சமூக வலைதளங்களில் போட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து போன சிறுமி என்ன செய்வதென்று தெரியாமல் அவரின் பேச்சை கேட்க ஆரம்பித்துள்ளார். 

ஆனால், அந்த உறவுக்கார பெண் திருவனந்தபுரம், கொல்லம், கொட்டியம் என நிறைய இடங்களில் உள்ள லாட்ஜ்-களுக்கு சிறுமியை அழைத்து சென்று, அங்கு பலரை வரவழைத்து விபச்சாரத்தில் தள்ளி உள்ளார். இதன்மூலம் அந்த பெண் லட்சக்கணக்கில் பணமும் சம்பாதித்து உள்ளார். இதை கேட்டு பெற்றோர் உள்ளிட்ட அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சொந்தக்கார பெண் லினட்,  கருநாகப் பள்ளியில் லாட்ஜ் நடத்தி வந்த பிரதீப், ரினு, நசீம் உள்ளிட்ட 4 பேரையும் போலீசா கைது செய்தனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP